5 செட் துணி வாங்கித் தந்த விஜயகாந்தை மறந்துட்டாரே வடிவேலு.. ப்ளூ சட்டை மாறன் போட்ட போடு!

சென்னை: திரை பிரபலங்களுக்கு தொடர்ந்து இறுதி அஞ்சலி கூட செலுத்தாமல் தவிர்த்து வருகிறார் வடிவேலு என்கிற குற்றச்சாட்டை ப்ளூ சட்டை மாறன் எழுப்பி உள்ளார். விஜயகாந்த் தயவால் வளர்ந்து பெரிய காமெடி நடிகராக மாறிய வடிவேலு அவரையே எதிர்த்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு இறுதி அஞ்சலியாவது செலுத்த வரலாமே என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சின்னக்கவுண்டர், தவசி, எங்கள் அண்ணா, நரசிம்மா என பல படங்களில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் வடிவேலு. அரசியல் ரீதியாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயகாந்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, அவரை படுமோசமாக விமர்சித்து பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், விஜயகாந்த் அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை என்பது தான் சிறப்பு.

Blue Sattai Maran trolls Vadivelu how he forgot Vijayakanths help during his earlier days

ப்ளூ சட்டை மாறன் விளாசல்: "எத்தனையோ தடவ வடிவேலு தன்னை பொது மேடைகள்-ல இழிவு படுத்திருந்தாலும்.. கடைசி வரைக்கும் அவர் வடிவேலுவ தப்பா பேசுன மாதிரி ஒரு video கூட நீங்க பார்த்திருக்க முடியாது அதான் கேப்டன்.

மேன் மக்கள் மேன் மக்களே - Faazith Kamaldeen, Facebook.

சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்கும்போது நல்ல துணி இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு ஐந்து செட் துணிகளை வாங்கித்தந்தார் கேப்டன்.

தனது நெருங்கிய நண்பர்கள், உடன் நடித்தவர்கள், ஆரம்பகாலத்தில் உதவி செய்தவர்கள் என எவரது இறப்பிற்கும் செல்லாதவர் வடிவேலு. உதாரணம்:

விவேக், மயில்சாமி, மனோபாலா, போண்டாமணி, விஜயகாந்த் மற்றும் பலர்.

தனக்குத்தெரிந்த திரையுலகத்தினர் சென்னையில் இறந்த தகவல் வந்தால் உடனே... மதுரைக்கு விமான டிக்கட் போட்டு ஓடிவிடுவதும், வேறு ஊர்களில் நடிகர்கள் இறந்தால்.. சென்னைக்கு வந்துவிடுவதும் இவரது யுக்தியாம்.

பல்வேறு படங்களில் உடன் பணியாற்றிய அல்வா வாசு மதுரைக்காரராம். இவரது வீட்டிற்கு அருகேதான் அவரது வீடாம். அவர் இறந்த தகவல் வந்ததும்.. உடனே சென்னைக்கு வந்து விட்டாராம்." என்கிற ட்வீட்டை போட்டு ப்ளூ சட்டை மாறன் வடிவேலு கடைசி நேரம் வரை போண்டா மணிக்கும் உதவவில்லை. விஜயகாந்த் இறுதிச்சடங்கிலும் பங்கேற்கவில்லை என விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X