வேட்டையன் முதல் நாள் வசூல் இதுதான்.. இப்பவே ஆருடம் பார்த்த ப்ளூ சட்டை மாறன்.. எல்லாம் கோட் எஃபெக்ட்!

சென்னை: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தை தனது விமர்சனத்தில் எந்தளவுக்கு கழுவி ஊற்ற முடியுமோ அந்த அளவுக்கு கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வடைகள் குறித்த ட்வீட்களையும் போட்டுத் தாக்கி வருகிறார்.

ஆனால், அதில், விஜய்யை தாக்காமல் ரஜினிகாந்தை தொடர்ந்து தாக்கி வருகிறார் ப்ளூ சட்டை மாறன் என்பது குறிப்பிடத்தக்கது. கோட் படத்தின் வசூலை வடை என சொல்லும் தலைவர் ரசிகர்கள் கொஞ்சம் ஜெயிலர் வடை வசூலையும் பாருங்க என கலாய்த்திருந்தார்.

vettaiyan blue sattai maran box office

இந்நிலையில், அடுத்து வெளியாக காத்திருக்கும் வேட்டையன் படத்தின் வசூல் முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்யும் என்பது குறித்த ட்வீட்டையும் போட்டு தற்போது ட்ரோல் செய்துள்ளார்.

2 நாளில் 200 கோடி: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இரண்டாவது நாளான நேற்றும் உலகம் முழுவதும் 70 முதல் 80 கோடி வசூலை ஈட்டி அதிகபட்சமாக 200 கோடியை எட்டியிருக்கும் என்றே கூறுகின்றனர். கண்டிப்பாக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக 2வது நாள் வசூல் அறிவிப்பையும் அர்ச்சனா கல்பாத்தி வெளியிடுவார் என்றே தெரிகிறது.

vettaiyan blue sattai maran box office

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: கோட் படத்தில் டீ ஏஜிங் விஜய் தான் ஸ்பெஷலே. ஆனால், அதையே சரியாக வடிவமைக்க தவறி விட்டார்கள் என்றும் பல இடங்களில் பிசிறு அடிக்கிறது என்றும் கோட் படத்தை பார்க்க போனால் நீங்க தான் ஆடு என்றும் விமர்சனத்தில் வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன் கோட் படத்தின் வசூல் குறித்த ட்வீட்களையும் பதிவிட்டு வருகிறார்.

வேட்டையன் 150 கோடி: அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியாகவுள்ள நிலையில், அக்டோபர் 11ம் தேதி இந்நேரம் எல்லாம் வேட்டையன் முதல் நாள் வசூல் 150 கோடி என அறிவிப்பு வரும் பாருங்கள் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு வேட்டையன் படத்தின் வசூலை ட்ரோல் செய்துள்ளார். அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அந்த படம் கண்டிப்பாக பெரிய வசூல் வேட்டை செய்யும் என ரஜினி ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X