விஜய் டூ மகிழ் திருமேனி.. கையை கொடு சகல.. விடாமுயற்சியை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: தமிழ்நாட்டில் பிரபல திரை விமர்சகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். அவர் விமர்சனம் ஒவ்வொரு படத்தையும் வைத்து செய்துவிடுவார். அவரது எளிமையான பேச்சும், கிண்டல்களும் வெகுவாக ரசிக்க வைப்பதால் அவரது வீடியோக்களுக்கு என்று பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் அவரது கிண்டல்கள் ஓவர் டோஸ் ஆகும்போது சர்ச்சைகளும் எழும். இந்தச் சூழலில் விடாமுயற்சி படத்தை தனக்கேயுரிய பாணியில் கலாய்த்திருக்கிறார் அவர்.

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படத்துக்கு வாருங்கள் என்று இயக்குநர் மகிழ் திருமேனி படத்தின் ப்ரோமோஷனின்போது கொடுத்த பேட்டிகளில் தெளிவுப்படுத்தியிருந்தாலும்; இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வெளியாவதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடுதான் ஏகேவின் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள். மேலும் நேற்றைய நாளை தங்களது பண்டிகை நாளாகவே கொண்டாடினார்கள்.

vidaamuyarchi magizh thirumeni ajith blue sattai maran

அஜித் கொடுத்த ஐடியா: இந்தப் படத்தின் கதை மகிழ் திருமேனியின் சொந்த கதை கிடையாது என்பதையும் அவர் முன்னரே தெரிவித்துவிட்டார். முக்கியமாக 1997ஆம் ஆண்டு வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் கதையை ரீமேக் செய்ய ஐடியா கொடுத்ததே அஜித்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே மகிழ் திருமேனி தனது சொந்த கதையை எடுத்திருக்கலாமே என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் ஓபனாகவே பேசினார்கள். ஏனெனில் மகிழ் நல்ல இயக்குநர் என்கிற பெயரை எப்போதோ எடுத்துவிட்டார்.

திருப்தி கொடுக்காத படம்: இப்படி ஏகப்பட்ட விஷயங்களோடு நேற்று வெளியான விடாமுயற்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு படத்தின் மீது பெரிய திருப்தி ஏற்படவில்லை. இது அஜித் படம் மாதிரியே இல்லையே என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிடுகின்றனர். மேலும் திரைக்கதையிலும் ஒன்றும் இல்லை; அஜித்துக்கான மாஸ் எலிமெண்ட்ஸும் குறைவாகத்தான் இருக்கின்றன; இந்தப் படத்தை ஏன் அஜித் தேர்ந்தெடுத்தார் என்று கழுவி ஊற்றிவருகின்றன. வசூலிலும் படம் டல்லடிக்கவே செய்திருக்கிறது.

அடுத்த படமும் மகிழுடனா?: விடாமுயற்சி படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இன்னொரு பயமும் தொற்றிக்கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்பாக மகிழ் திருமேனி அளித்த ஒரு பேட்டியில், ரெடியாக இருங்கள். நாம் சேர்ந்து நிறைய பயணிக்கவிருக்கிறோம் என்று அஜித் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். அதை நியாபகத்தில் வைத்திருக்கும் ரசிகர்கள் இன்னொரு படமும் மகிழ் திருமேனியுடன் அஜித் செய்ய வேண்டாம்; அப்படியே செய்தாலும் இவர் தலையிடாமல் இருந்தால் போதும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விடாமுயற்சி படத்தை பங்கமாக கலாய்த்திருக்கிறார். வடிவேலு இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனிடம் ஒரு படத்தில், சகல கைய கொடு சகல என்று வசனம் பேசுவார். அந்த வசனம் படு ஃபேமஸானது குறிப்பிடத்தக்கது. அந்தப் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து விஜய் மகிழ் திருமேனியிடம் அந்த வசனத்தை சொல்லும்படி மீம் போட்டிருக்கிறார். அதாவது விடாமுயற்சி படம் ஃப்ளாப் ஆனதற்கும்; மகிழ் திருமேனி இயக்கத்தில் தான் நடிக்காததை எண்ணி மகிழ்ச்சியடையும்படியும் விஜய் பேசுகிறார் என மறைமுகமாக குறிப்பிட்டு அந்த மீமை பகிர்ந்திருக்கிறார். அது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

https tamil filmibeat com throw-back-stories rajinikanth-trolls-ajiths-vidaamuyarchi-movie-few-years-back-152461 html

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X