பெயர தூக்க நாலு பேரு.. அந்த நாலு பேரு இவங்க தானா.. ப்ளூ சட்டை மாறன் என்ன இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிளே மிகப்பெரிய விவாதப் பொருளாக சமூக வலைதளங்களில் மாறி உள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில் அனிருத் இசையில் உருவான ஹுகும் பாடல் வேறலெவலில் டிரெண்டாகி வருவதற்கு காரணமே அந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் பஞ்ச் லைன்களாக உள்ளது தான் காரணம் என்கின்றனர்.

பயில்வான் ரங்கநாதனை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனும் ஹுகும் பாடல் வரிகளில் உள்ள சர்ச்சைகள் குறித்து வெளிப்படையாக போட்டுள்ள ட்வீட் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி மேலும், சில ரசிகர்களையும் டென்ஷன் ஆக்கி உள்ளது.

 Blue Sattai Maran trolls Vijay, Dhanush, Sivakarthikeyan and Simbu with Jailer lyrics

பெயரை தூக்க நாலு பேரு.. பட்டத்தை பறிக்க நூறு பேரு உள்ளிட்ட வரிகள் குறிப்பாக இந்த 4 நடிகர்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டு இருக்கும் என ப்ளூ சட்டை மாறன் வெளிப்படையாகவே ட்வீட் போட்டு சம்பவம் செய்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு டிமாண்ட்: நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என அப்பவே பாடல் வைத்த நிலையில், சூப்பர்ஸ்டாருடா என இப்போதும் ஜெயிலர் படத்தில் பாடல் வைக்கும் அளவுக்கு நம்பர் ஒன் நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

 Blue Sattai Maran trolls Vijay, Dhanush, Sivakarthikeyan and Simbu with Jailer lyrics

அடுத்த சூப்பர்ஸ்டார், யங் சூப்பர்ஸ்டார், குட்டி ரஜினி என பல நடிகர்கள் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்காக போட்டி போட்டு வரும் நிலையில், எப்பவுமே ராஜா நான் தான் என ரஜினிகாந்தின் ஜெயிலர் பட செகண்ட் சிங்கிள் பாடலும் அமைந்துள்ளது.

பெயரை தூக்க நாலு பேரு: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் சரியான கம்பேக் கொடுக்க போராடி வருகிறார்.

 Blue Sattai Maran trolls Vijay, Dhanush, Sivakarthikeyan and Simbu with Jailer lyrics

இந்நிலையில், இந்த ஆண்டின் நம்பர் ஒன் படமாக ஜெயிலர் உருவாக வேண்டும் என்கிற தொழில் போட்டி இருக்கும் நிலையில், ஜெயிலர் படத்தின் பாடல்கள் மூலமே ரொம்பவே ஃபயராக நெல்சன் உழைத்து இருக்கிறார் என்பது புரிகிறது. மேலும், தர்பார், அண்ணாத்த படங்கள் டல் அடித்த நிலையில், ஜெயிலர் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் கட்டாயத்தில் ரஜினியும் தள்ளப்பட்டு இருக்கிறார்.

 Blue Sattai Maran trolls Vijay, Dhanush, Sivakarthikeyan and Simbu with Jailer lyrics

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு: இந்நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட்டில் "பெயர தூக்க நாலு பேரு. பட்டத்த பறிக்க நூறு பேரு., Commander, Prince, Thotti Jaya and Captain Miller?" என பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

 Blue Sattai Maran trolls Vijay, Dhanush, Sivakarthikeyan and Simbu with Jailer lyrics

சமீபத்தில் நடிகர் விஜய்யை கமாண்டர் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்த நிலையில், விஜய், பிரின்ஸ் சிவகார்த்திகேயன், தொட்டி ஜெயா சிம்பு மற்றும் கேப்டன் மில்லர் தனுஷை தான் ரஜினி சொல்கிறாரா என கொளுத்திப் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X