Vijay: உங்களுக்கு உணவளிப்பவர் உங்கள் விஜய்.. தளபதியை தாளித்து எடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜய்யின் உத்தரவை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு ஒரு சில இடங்களில் தங்களால் முயன்ற உதவிகளை செய்து பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர்.
எண்ணூர் பகுதியில் கழிவு எண்ணெய் கலந்து விடுவது பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி பாராட்டுக்களை அள்ளி உள்ளனர்.

பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பது, அவர்களுக்கு உதவுவது என தொண்டு உள்ளத்துடன் உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால், சிலர் இதனை அரசியல் விளம்பரமாக மாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், ப்ளூ சட்டை மாறன் அதை குறிப்பிட்டு ட்ரோல் செய்துள்ளார்.
உதவி செய்யும் விஜய் மக்கள் இயக்கம்: தளபதி விஜய் அறிக்கை வெளியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், அவரது ரசிகர்களும் மக்கள் இயக்க நிர்வாகிகளும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அரசியல்வாதிகளை விட மோசமாக: சில பேருக்கு உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு பல போட்டோக்களை எடுத்து வரும் அரசியல்வாதிகளை போல விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு அளித்து விட்டு விஜய்யின் போட்டோவையும் கூடவே கொண்டு வந்து இவர் தான் உங்களுக்கு இந்த நேரத்தில் சோறு போடுகிறார் என பதிய வைப்பது போல விளம்பரம் செய்வது தேவையற்ற செயல் என்றும் அது நடிகர் விஜய்யை தான் பாதிக்கும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உணவளிப்பது உங்கள் விஜய்: இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உங்களுக்கு உணவளிப்பவர் உங்கள் விஜய். மறந்துடாதீங்கம்மா... உங்கள் விஜய்.” என ட்வீட் போட்டு நடிகர் விஜய்யை கலாய்த்துள்ளார். அவங்களாவது சோறு போடுறாங்க, நீங்க என்ன சார் பண்றீங்க என விஜய் ரசிகர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











