மாணவர்களுக்கு விருது வழங்கிய விஜய்.. பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. அஜித்தையும் விடல?

சென்னை: தளபதி விஜய் கல்வி விருது விழா என்கிற தலைப்பில் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்வில், பங்கேற்ற நடிகர் விஜய் துவக்கத்தில் 10 நிமிடங்கள் மாணவர்கள் முன்பாக பேசினார். லேசான அரசியல், போதைப் பொருளுக்கு எதிரான குரல், சமூக வலைதள வதந்திகள் உள்ளிட்டவை அவரது பேச்சில் ஹைலைட்டாக தெரிந்தன.

போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம் என நடிகர் விஜய் பேசிய நிலையில், அதை வைத்து ப்ளூ சட்டை மாறன் விஜய்யை கலாய்த்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டை பார்த்த தளபதி ரசிகர்கள் கடுப்பாகி ப்ளூ சட்டை மாறனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Blue Sattai Maran Vijay

தொடர்ந்து நடிகர் அஜித்தையும் வம்பிழுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு அஜித் ரசிகர்களிடமும் ஏக வசனங்களை வாங்கிக் கட்டி வருகிறார்.

விருது வழங்கிய விஜய்: கல்வி கண் போன்றது, கல்வி கற்பது ரொம்பவே முக்கியம் என்பதை அறிந்து கொண்ட விஜய் படிக்கும் மாணவர்களை ஊக்கு விக்க கடந்த ஆண்டு முதல் கல்வி விருது விழாவை ஆரம்பித்து நடத்தி வருகிறார். 21 மாவட்ட மாணவர்களுக்கான முதல் கட்ட விழா தான் இன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. அடுத்ததாக வரும் ஜூலை 3ம் தேதி 2ம் கட்டமாக இந்த விழா நடைபெறும் என விஜய் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிரான குரல்: கடந்த முறை நடிகர் விஜய் பேசும் போது பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே டாஸ்மாக் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மாணவர்கள் ஒரு ரவுண்டு போட்டுக் கொண்டா பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்கிறார்கள் என பேசிய நடிகர் விஜய் இந்த முறை Say No to Drugs என்பதை பெரியளவில் வலியுறுத்தியுள்ளார். அந்த அளவுக்கு பல பள்ளி மாணவர்கள் இடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் காரணமாகவே நடிகர் விஜய்

Blue Sattai Maran Vijay

ப்ளூ சட்டை மாறன் கிண்டல்: "போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது. தவறான பழக்கங்கள் வேண்டாம் - மாணவர்களுக்கு விஜய் அறிவுரை. 'போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் படங்களையும் பார்த்து கெட்டுப்போக வேண்டாம்' என ப்ளூ சட்டை மாறன் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ட்ரோல் செய்துள்ளார்.

Blue Sattai Maran Vijay

அஜித்தையும் விடல: கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அஜித்தை ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது, 'தல.. மாணவர்கள் மத்தியில் விஜய் இன்னைக்கி பயங்கரமா ஸ்கோர் பண்ணிட்டு இருக்காரு. ஏதாச்சும் ஃபோட்டோ வை எறக்கி விடுங்க. பழசா இருந்தாலும் பரவால்ல' என ட்வீட் போட்டு வேறலெவலில் ட்ரோல் செய்துள்ளார். மேலும், ஸ்கூல் பசங்களோட தான் விஜய் இருப்பார். ஆனால், கல்லூரி மாணவர்களுடன் அஜித் இருப்பார் என்றும் சேம் சைடு கோல் போட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சி சோஷியல் மீடியாவில் வேறலெவலில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X