Don't Miss!
- Sports
ஆஸி.யை வீழ்த்த 2 செய்தால் போதும்.. ரோகித் படைக்கு முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை
- News
"ஆணுறை".. ஆஹா, அப்ப இதுவேறயா.. டபுள் மடங்காக எகிறிய "கருத்தடை" மாத்திரை.. புட்டு புட்டு வைத்த ஆய்வு
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
அதானி குழுமம்: ஹிண்டன்பர்க் மூலம் எல்ஐசி-க்கும் பிரச்சனை.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை..!
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
மீண்டும் பிரியாணி.. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்? ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோத காத்திருக்கின்றன.
ஒரு பக்கம் இருவரும் புதிய போட்டோக்களையும், பெரிய பேனர்களையும் படக்குழுவினரை வைத்து பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் பனையூரில் பிரியாணி போட்ட விஜய் மீண்டும் இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை பிரியாணி விருந்துடன் சந்திக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியானதும் அதனை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
துணிவு 'சில்லா சில்லா’ பாடலில் பிக் பாஸ் பிரபலங்கள்.. அமீர், பாவனி, சிபிக்கு அடித்தது ஜாக்பாட்!

யாரு பாக்ஸ் ஆபிஸ் கிங்
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு படங்களும் தனித்தனியாக வெளியானால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கோலிவுட்டுக்கும் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என நம்ப பட்டாலும், இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் தான் யாரு இப்போ பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பது உறுதியாகும் என இந்த போட்டியை இருவருமே எதிர்நோக்கி காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறைமுக ப்ரமோஷன்
நேரடியாகவும் மறைமுகமாவும் இரு தரப்பினரும் தங்கள் பட ப்ரமோஷனை தீயாக செய்து வருகின்றனர். பேனர் வைப்பதில் இருந்து விளம்பரம் செய்ய என்ன என்ன வழிகள் உள்ளனோ அனைத்தையும் அதிரடியாக செய்து ரசிகர்களை எப்போதுமே ஆக்டிவாக வைத்திருக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

விஜய் கொஞ்சம் அதிகம்
அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், விஜய் நேரடியாகவே தனது ப்ரமோஷனை இறங்கி செய்து வருகிறார். பீஸ்ட் படம் படுத்து விட்ட நிலையில், வாரிசு வெற்றி பெற வேண்டும் என தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்தா போட்டு உற்சாகப்படுத்தி வருகிறார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

மீண்டும் பிரியாணி
கடந்த மாதம் பனையூரில் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து அளித்து அனைவரையும் நேரில் சந்தித்து முதலில் உங்கள் பெற்றோர்களையும் குடும்பத்தையும் பாருங்க நண்பா என வயிறார உணவு போட்டு அட்வைஸ் செய்து விட்டு அனுப்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் பனையூரில் அடுப்பை பற்ற வைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ப்ளூ சட்டை மாறன் கேள்வி
"மீண்டும் பிரியாணி.. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்?" என அந்த செய்தியை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். அஜித் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டை அதிகம் ஷேர் செய்து விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

துணிவுக்கு பயந்தா
மீண்டும் பனையூரில் விஜய் பிரியாணி கொடுப்பதே அஜித்தின் துணிவு படத்துக்கு பயந்து தான் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ள நிலையில், மெட்ரோ ரயில், பனையூர் பிரியாணின்னு விஜய் இப்படி வெறித்தனமா ப்ரமோஷன் பண்றாரே.. அந்த பயம் இருக்கணும் டா என அஜித் ரசிகர்கள் சண்டையை ஸ்டார்ட் செய்து விட்டனர்.

வருஷத்துக்கு 3 மீட்டிங்
நடிகர் விஜய் எப்போதுமே வருஷத்துக்கு மூன்று முறை தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி போட்டு உற்சாகப்படுத்துவது வழக்கம். முந்தைய மீட்டிங்கில் இடம்பெறாத 3 மாவட்ட நிர்வாகிகளை இன்று அவர் சந்திக்க உள்ளார். இதற்கும் வாரிசு பட ப்ரமோஷனுக்கும் சம்மந்தம் இல்லை என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.