அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு போகாத விஜய்.. ப்ளூ சட்டை மாறன் கேட்ட கேள்வி.. வெரி ராங் ப்ரோ என கலாய்!

சென்னை: ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களையும் சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். விஜய்க்கு சாதகமாக இவர் பேசி வருகிறார் என சமீப காலமாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், பட்டும் படாமல் தற்போது விஜய்யை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார் என்றும் இதுவே ரஜினிகாந்தாக இருந்திருந்தால் ப்ளூ சட்டை மாறனின் டோனே வேறமாறி இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு தவெக கட்சியில் இருந்து புஸ்ஸி ஆனந்த் கலந்துக் கொண்டார். ஆனால், சில கட்சிகளில் இருந்து யாருமே பங்கேற்கவில்லை என்கிற ட்ரோல்கள் பறந்துக் கொண்டிருக்கும் நிலையில், தவெக தலைவரான விஜய் ஏன் பங்கேற்கவில்லை என்கிற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் எழுப்பியுள்ளார்.

Vijay Blue Sattai Maran troll

எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், பார்ட் டைம் அரசியல்வாதியாகவே அவர் இப்போதைக்கு செயல்பட்டு வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

கடைசி படம்: அரசியலுக்கு வந்துவிட்டால் முழு நேரமாக மக்கள் பணி மட்டுமே செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்துக்கொண்டு தான் விஜய் ஜன நாயகன் படத்தை முடித்துவிட்டு முழு நேரமும் மக்கள் பணி செய்யப்போகிறேன் என ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனாலும், கிடைக்கும் நேரங்களில் முக்கியமான அரசியல் சந்திப்புகளையும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். இருந்தாலும், விஜய்யை சிலர் இதை காரணமாக வைத்தே ட்ரோல் செய்து வருகின்றனர் என தளபதி ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் கேள்வி: "What bro?. This is wrong bro: 'தலைவா' பிரச்னைக்கு கொடநாட்டில் முதல்வரை பார்ப்பேன். ரெய்டு பிரச்னைக்கு கோவையில் பிரதமரை பார்ப்பேன். 'மாஸ்டர்' பிரச்னைக்கு கோட்டையில் முதல்வரை பார்ப்பேன். ஆனால்.. மக்களுக்காக பேச.. அனைத்துகட்சி மீட்டிங் போகாமல்..‌ ஷூட்டிங் போய்விடுவேன்‌." என அனைத்து கட்சி கூட்டத்துக்கு வராமல் படப்பிடிப்பிலே விஜய் பிசியாக இருப்பது ஏன் என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விரைவில் பிரஸ்மீட்: விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும் என பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், ஜன நாயகன் படத்தை முடித்த கையோடு பிரஸ் மீட் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அரசியலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய் பக்காவாக திட்டமிட்டு கற்றுக் கொண்டு தயாராகி வருகிறார் என்றும் அவருக்கு யாரை பார்த்தும் பயமில்லை என்றும் விஜய் தரப்பு கூறி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X