ஆடியோ லாஞ்ச் வச்சே இவ்ளோ தான் வியூஸா? விஜய் பவர் அவ்ளோதானா.. ப்ளூ சட்டை மாறன் மரண கலாய்!
சென்னை: வாரிசு படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் துணிவு ட்ரெய்லரை முந்தவில்லை என அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். விளம்பரம் போட்டுத் தான் வியூஸ் அள்ளினீங்க என விஜய் ரசிகர்கள் கம்பு சுத்தி வந்த நிலையில், துணிவுக்கு ஆடியோ லாஞ்ச் வைக்காமலையே இவ்ளோ வியூஸ் வந்துருக்கே என ப்ளூ சட்டை மாறன் மரண கலாய் கலாய்த்துள்ளார்.
இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வாரிசு மற்றும் துணிவு என ப்ளூ சட்டை மாறனுக்கு 2 ட்ரெய்ண்டிங்கான ட்ரோல் மெட்டீரியல் மாட்டி உள்ளது.
பார்த்திபனையே பாடாய் படுத்திய ப்ளூ சட்டை மாறன் விஜய் மற்றும் அஜித் இப்படி அடுத்து அடுத்து ட்ரெய்லர் வெளியிட்டு வசமாக சிக்கி உள்ளனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆடியோ லாஞ்ச் வைக்கல
துணிவு படத்தின் ட்ரெய்லர் 50 மில்லியன் வியூஸை கடந்து வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. 24 மணி நேரத்தில் துணிவு படத்தின் தமிழ் ட்ரெய்லர் 30 மில்லியன் ரியல் டைம் வியூஸ் கடந்து சாதனை படைத்தது. நடிகர் அஜித் துணிவு படத்துக்காக வழக்கம் போல எந்தவொரு ஆடியோ லாஞ்சும் வைக்கவில்லை. ஆனாலும், அவருக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் படை இருப்பதை விஜய் ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிரியாணி போடல
மேலும், தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு பனையூரில் பிரியாணி விருந்து எல்லாம் போட்டும் விஜய்யின் வாரிசு படம் ரெக்கார்டு படைக்க முடியவில்லை என அஜித் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். நம்பர் ஒன் என்று சொன்னால் மட்டும் போதாது செயலில் காட்ட வேண்டும் என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறக்கின்றன.

Cumulative Real Time Views
வாரிசு படத்தின் ட்ரெய்லர் ரெக்கார்டு உடைக்க முடியாததற்கு ஒரே காரணம் தெலுங்கு ட்ரெய்லரை உடனடியாக தில் ராஜு வெளியிட்டது தான் என விஜய் ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், Cumulative Real Time Views என அதையே சேர்த்துப் போட்டு 32 மில்லியன் வியூஸ் தில் ராஜு காட்டினாலும் தமிழில் ரசிகர்கள் படை குறைந்து விட்டதா என கேள்விகள் கிளம்பி உள்ளன.

மரண கலாய்
'துணிவு ட்ரைலருக்கு Ads இருப்பதால் அதிக வியூஸ் வருகிறது. வாரிசுக்கு Ads இல்லை - விஜய் ரசிகர்கள். துணிவுக்கு ஆடியோ லாஞ்ச் ப்ரமோஷன் செய்யவில்லை. எந்த ப்ரமோஷனுக்கும் அஜித் வராமலே இவ்வளவு ஆதரவு இருக்கிறது - அஜித் ரசிகர்கள்." என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு விஜய் பவர் குறைந்து விட்டதா? என்று கேட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார்.


Click it and Unblock the Notifications











