அடிச்சாலும், புடிச்சாலும்.. சீமானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்.. ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட்.. கமல்?
சென்னை: கூமுட்டை, நடுரோட்ல நிக்காத லாரில அடிபடுவ என தவெக தலைவர் விஜய்யை சமீபத்தில் சீமான் வசைபாடிய நிலையில், விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் #கலவித்தலைவன்_சீமான் என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பொளந்து வருகின்றனர்.
ஆனால், தளபதி விஜய் கில்லி படத்தில் சொல்வதை போல "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்கிற குறளுக்கு எடுத்துக்காட்டாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், அதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் சூப்பரான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதற்கு கீழ் விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
சீமானுக்கு வாழ்த்து: என்னோட தம்பி அரசியலுக்கு வந்தால் அண்ணன் தான் முதல் ஆளாக சந்தோஷப்படுவேன் என சொல்லி வந்த சீமான் விஜய்யின் பிரம்மாண்ட மாநாட்டை பார்த்து கடுப்பான நிலையில், விஜய் குறித்து அவதூறு கருத்துக்களையும் தரம் தாழ்ந்த பேச்சுக்களையும் அடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். விஜய் ரசிகர்கள் காலை முதலே சோஷியல் மீடியாவில் சீமானை படுகேவலமாகவும் காமெடி மீம்களாகவும் சித்தரித்து வந்த நிலையில், விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் கலாய்: "அடிச்சாலும், புடிச்சாலும்.. நீயும், நானும் அண்ணன் தம்பிடா.." என அந்த செய்தியை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் கொளுத்திப் போட்டு கலாய்த்துள்ளார். "நேத்து அரசியலுக்கு வந்த விஜய்யிடம் இருக்கும் அரசியல் நாகரீகம் , இத்தனை வருடங்களாக இருக்கும் சீமானுக்கு இல்லை.." என்றும் மேன் மக்கள் மேன் மக்களே என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் விஜய்க்கு ஆதரவாகவும் சீமானை விளாசியும் குவிந்து வருகின்றன.

கமலுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?: தன்னை பற்றி தப்பாக பேசிய சீமானுக்கு விஜய் வாழ்த்து சொல்கிறார். ஆனால், மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்றும் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கு கூட ஒரு வாழ்த்து ட்வீட் போடவில்லையே ஏன்? என ஏகப்பட்ட கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











