விஜய்யிடம் எப்போதும் ஒரு ஆயுதம் இருக்கும்.. பிஜேபி தான் அந்த ஆயுதம்.. ப்ளூ சட்டை மாறன் தாக்கு!

சென்னை: லியோ படத்தில் சிலுவையை கழட்டிப் போட்டு விட்டு பார்த்திபனாக விஜய் மாறியதையே அரசியலாக பார்க்கப்பட்ட நிலையில், லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் அழகாக நெற்றியில் குங்குமப் பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டு காவி நிற சட்டையை அணிந்து கொண்டு வந்தது தன்னை ஒரு பாஜக பிரதிநிதியாகவே விஜய் அடையாளப்படுத்தி உள்ளார் என ப்ளூ சட்டை மாறன் பங்கமாக தாக்கி பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை தமிழ்நாட்டில் கொண்டு வருவேன் என சொல்லும் போதெல்லாம் அவர் பாஜகவின் பி டீம் என்றே சொல்லப்பட்டு வந்த நிலையில், பாஜகவை தமிழ்நாட்டில் நடிகர் விஜய் மூலம் அடுத்து கொண்டு வர திட்டுமிட்டு இருக்கின்றனர் என தற்போது உருட்ட ஆரம்பித்துள்ளனர்.

Blue Sattai Maran trolls Vijay will clearly expose his idealogy about BJP in Leo Success Meet

நெற்றியில் குங்குமம்: ஜோசப் விஜய்யாக இருந்தாலும், ஜாதி, மதம் கடந்த மனிதனாகவே தன்னை இதுவரை நிலை நிறுத்தி வருகிறார் நடிகர் விஜய். நேற்றைய நிகழ்ச்சியில் காவி கலர் சட்டையை அணிந்துக் கொண்டு நெற்றியில் அவர் குங்குமம் வைத்து வந்ததை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தமிழ்நாட்டின் ஒரே கமாண்டர் விஜய் தான் என்றும் ஜெய் ஸ்ரீராம் என இந்தியிலேயே டைப் செய்து ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு நடிகர் விஜய் பாஜகவின் பிரதிநிதி என்றே கலாய்த்துள்ளார்.

அஜித் தான் சூப்பர்: "கருப்புப்பணத்துல சம்பளம் வாங்கறவன், ப்ளாக் டிக்கட்டை பல்க்கா விக்கிறவன், தன்னோட பினாமியை தயாரிப்பாளரா ஆக்குறவன், அரசியலுக்கு வரப்போறேன்னு அல்வா குடுக்கறவன்தான் ரெய்டு வந்தா பயப்படனும். ரெய்டு இல்லாத வாழ்க்கை வேணும். கம்முனு இருந்தா ஜம்முனு இருக்கலாம்னு ஆடியோ லாஞ்ச்ல பம்மனும்.

காவிச்சட்டை, குங்குமம் வேசம் போடனும்.

வெள்ளைப்பணத்தை சம்பளமா வாங்கி, ஒழுங்கா வரி கட்டுறவன் நிம்மதியா தூங்கலாம். ரெய்டு வந்தா தில்லா ஃபேஸ் பண்ணலாம்.

கலர் கலரா வேசம் போடாம.. இயல்பான பேச்சு மற்றும் உடை அணிந்து மக்களை சந்திக்கலாம்.

The name is Ajith." என தற்போது நடிகர் அஜித்தையும் அவரது ரசிகர்களையும் விஜய்யை கலாய்க்க துணைக்கு அழைத்து இருக்கிறார்.

பிஜேபி தான் ஆயுதம்: "விஜய்யிடம் எப்போதும் ஒரு ஆயுதம் இருக்கும். அமைதிதான் அந்த ஆயுதம் - அர்ஜூன்‌." என அர்ஜுன் பேசியதை வைத்து அதெல்லாம் இல்லைங்க இப்போதைக்கு பிஜேபி தான் விஜய்யிடம் இருக்கும் அந்த ஆயுதம் என ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறார். விஜய் ரசிகர்கள் வழக்கம் போல ப்ளூ சட்டை மாறனை கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X