எப்படி இருந்த நான்... விஜய்யை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. வெங்கட் பிரபுவுக்கு என்ன காண்டோ?

சென்னை: நடிகர் விஜய் கேரளாவில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நிலையில், தளபதி விஜயை காண தினமும் ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். காலை முதல் மாலை வரை காத்திருக்கும் ரசிகர்களை தினமும் மாலை வேளையில் சந்தித்து வருகிறார் விஜய்.

ரசிகர்களுடன் பேசுவது, அவர்கள் எடுத்து வரும் மாலையை அணிந்து கொள்வது, குழந்தையை தூக்கி கொஞ்சுவது, ரசிகர்களின் ஆல்பங்கள் கையெழுத்து போட்டு தருவது என கேரள ரசிகர்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக முடியுமோ அந்த அளவுக்கு சந்தோஷம் ஆக்கி வருகிறார் விஜய்.

Blue Sattai Maran trolls Vijay s latest hair style and look at Kerala

கோட் படத்திற்காக நடிகர் விஜய் மீசை இல்லாத கெட்டப்பில் நடித்து வரும் நிலையில், அதே லுக்குடன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்க்கு என்ன ஆச்சு என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய்யின் வித்தியாசமான லுக்: கோட் படத்திற்காக நடிகர் விஜய் மீசை இல்லாத லுக்கில் நடித்து வருகிறார். கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் வித்தியாசமான லுக்கை பார்த்து பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்றும் படம் மட்டும் சொதப்பட்டும் அதன் பிறகு அவருக்கு இருக்கு என விஜய் ரசிகர்கள் பல்லைக் கடித்துக் கொண்டிருக்க, மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கிடைத்த வாய்ப்பை கப்பென பிடித்துக் கொண்டு கலாய்த்து வருகின்றனர்.

எப்படி இருந்த நான்: ப்ளூ சட்டை மாறன் தனது திட்டப் பக்கத்தில் தற்போது நடிகர் விஜய்யின் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு, "எப்படி இருந்த நான்".. என விவேக் சொல்லும் " எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்கிற காமெடி டெம்ப்ளேட்டை போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்.

உடம்பை பாத்துக்கோங்க விஜய்: நடிகர் விஜய் ஒரு நாளைக்கு ஒரே ஒரு ஜூஸ் தான் ஹயாட் ரெசிடென்ஸி ஹோட்டலில் ஆர்டர் பண்ணி குடித்தார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் விஜய் தனது உடம்பை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், படத்துக்காக உடம்பைக் கெடுத்துக் கொண்டால் அரசியலில் களமிறங்கி மக்களுக்கான சேவையை எப்படி செய்ய முடியும் என தொண்டர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Blue Sattai Maran trolls Vijay s latest hair style and look at Kerala

250 கோடி சம்பளம்: நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ள நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஜய்க்கு அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் ரசிகர்களுக்கே வருத்தம்: நடிகர் விஜய்யின் புதிய தோற்றம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர்களுக்கே ரொம்ப வருத்தமாகத்தான் உள்ளதாம். ஆனால், படட்த்துக்காக விஜய் என்ன செய்தாலும் அது நல்லாத்தான் இருக்கும் என்பதால் அவர்கள் அமைதியாக விஜய்யின் முடிவை மதித்து காத்திருக்கின்றனர். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அதிக நேரம் சிஜி விஜய் தான் வரப் போகிறாரா? என்றும் விஜய்யின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என இப்படி செய்தால் படத்தில் எப்படி இருக்குமோ என்கிற சந்தேகங்களும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X