Leo: குடும்பங்கள் கழுவி ஊற்றும் தோல்வி.. லியோ வெற்றி விழா நாளிலும் விடாத ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையிலும், அது ஃபேக் என்றும் வடை என்றும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஜெயிலர் மற்றும் லியோ என அடுத்தடுத்து ப்ளூ சட்டை மாறன் கலாய்க்கவே தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகிறதா? அல்லது எப்படி வந்தாலும் முன்னணி ஹீரோக்கள் படங்களை அவர் கலாய்த்து தள்ளுகிறாரா என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கழுதைப்புலி தான் நம்பும்: படம் ஊத்திக்கிச்சி. அதான் இப்படி கதை விடுறாரு. ஹிட்டாகி இருந்தா மூடிக்கிட்டு இருந்துருப்பாரு. மக்களை ஏமாத்த முடியாது. இந்த பொய்க்கதையை கழுதைப்புலிங்க மட்டும்தான் நம்பும். ஏன்னா... அதைத்தான் ஈசியா ஏமாத்தலாம்.
குடும்பங்கள் கழுவி ஊற்றும் தோல்வி: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று போட்டாலே கலாய்க்க ஆரம்பித்துள்ள காலத்தில் குடும்பங்கள் கழுவி ஊற்றும் தோல்வி என ப்ளூ சட்டை மாறன் லியோ படத்தின் வெற்றி விழா இன்று மாலை கொண்டாட உள்ள நிலையில் இப்படி ஒரு ட்வீட் போட்டு விடாமல் துரத்தி வருகிறார்.
முதல் தடவை: விஜய் படம் ஃபிளாப் ஆகுறது முதல் தடவை இல்லை.. ஆனால், ஃபிளாப் ஆன படத்துக்கு வெற்றி விழா கொண்டாடுவது இதுதான் முதல் தடவை என பிரின்ஸ் படத்தின் டெம்பிளேட் மீமையும் போட்டு கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ஜெயிலர் மற்றும் லியோவை கலாய்த்து: "பருந்து: பொன்னியின் செல்வனை விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா போட்டு.. 525 கோடி வடை சுட்ருங்க மாஸ்டர்.
(வடை) தயாரிப்பாளர்: தமிழ்நாடு, அதர் ஸ்டேட், வெளிநாட்டுல எவ்ளோ கலக்சன்? டீடெயில் குடுன்னு கேட்டா?
பருந்து: அதெல்லாம் கேக்க மாட்டாங்க. நீ வடையை சுட்டுத்தள்ளு.
நாமதான் நம்பர் 1 பாக்ஸ் ஆபீஸ் கிங்.
சுறா: ஜெயிலரை விட 20 கோடி எக்ஸ்ட்ரா போட்டு.. 545 கோடி வடை சுட்ருங்க மாஸ்டர்.
(வடை) தயாரிப்பாளர்: தமிழ்நாடு, அதர் ஸ்டேட், வெளிநாட்டுல எவ்ளோ கலக்சன்? டீடெயில் குடுன்னு கேட்டா?
சுறா: அதெல்லாம் கேக்க மாட்டாங்க. நீ வடையை சுட்டுத்தள்ளு.
நாமதான் நம்பர் 1 பாக்ஸ் ஆபீஸ் கிங். நாமதான் பாக்ஸ் ஆபீஸ் கிங்.

மக்கள்: அட நாரைகளா.." என்றும் ட்வீட் போட்டு இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் வச்சு செய்து வருகிறார். ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டுக்கு கீழ் வழக்கம் போல விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் அவரை திட்டி மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











