கண்ணப்பா படத்தை திட்டாதீங்க ப்பா.. வேற லெவல்னு பாராட்டுங்க.. ப்ளூ சட்டை மாறன் என்ன இப்படி சொல்றாரே?

சென்னை: மோகன் பாபு தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர். அவரது மகனான விஷ்ணு மஞ்சு இப்போது கண்ணப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டிருக்கிறார்.

மோகன் பாபு தெலுங்கு திரையுலகில் ஃபேமஸ் நடிகராக வலம் வருபவர். சென்னையில் இருக்கும் சினிமா கல்லூரியில் படித்த மோகன் பாபு 1974ஆம் ஆண்டு வெளியான அல்லூரி சீத்தாராம ராஜு என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு வெளியான சொர்க்கம் நரகம் என்ற படத்தின் மூலம் முதல் ஹிட்டை பெற்றார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை அடுத்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி மொத்தம் அவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் தமிழிலும் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று: அண்ணன் ஒரு கோயில் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் தாய் மீது சத்தியம், அன்னை ஒரு ஆலயம், ரத்த பாசம், குரு, கர்ஜனை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்காலத்தினருக்கு தெரிய வேண்டுமென்றால் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு மேலதிகரியாக நடித்திருப்பாரே அவர்தான் மோகன் பாபு. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பிஸியாக இருந்த அவர்; எம்.பியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Blue Sattai Maran Trolls Vishnu Manchu s Kannappa Movie
Photo Credit:

கண்ணப்பா திரைப்படம்: அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான விஷ்ணு மஞ்சுவும் தெலுங்கு திரையுலகில் நடித்துவருகிறார். அவர் இப்போது கண்ணப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார். மோகன் லால், பிரபாஸ், சரத்குமார் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். படமானது நாளை வெளியாகவிருக்கிறது. பெரிய பொருட்செலவில் படம் உருவாகியிருப்பதால் அதீத எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

ட்ரோல் செய்தால் அவ்வளவுதான்: நாளை படம் வெளியான பிறகு யாராவது ட்ரோல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. படக்குழுவின் இந்த எச்சரிக்கையை பலரும் விரும்பவில்லை. ஒரு படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கு என்றுதான் சொல்வோம்; இவர்கள் என்ன இப்படி மிரட்டுகிறார்கள் என்றும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

ப்ளூ சட்டையின் ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கண்ணப்பாவை திட்டாதீங்கப்பா: பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் ஓடவில்லை. இறுதி அஸ்திரமாக கண்ணப்பா எனும் பக்திப்படத்தை நம்பியுள்ளார் விஷ்ணு. நாளை ரிலீஸ் ஆகும் இந்த பான் இண்டியா‌ படத்தை மோகன்பாபு தயாரித்துள்ளார். மோகன்லால், ப்ரபாஸ், அக்சய் குமார் ஆகியோர் மிக கௌரவமான வேடங்களில் நடித்துள்ளனர்.

நவரச நாயகன்: இப்படம் பார்ப்பவர்கள். மோகன்பாபு மற்றும் விஷ்ணுவின் இமேஜ் டேமேஜ் ஆகும்படியோ அல்லது படம் குறித்து தவறாகவோ பேச வேண்டாமென படத்தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே நவரச நாயகன் விஷ்ணுவின் கண்ணப்பா படம் பிடிக்காவிட்டாலும்.. வேற லெவல், தரமான சம்பவம் என பாராட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து வரவுள்ள அகண்டா 2, ஹரிஹர வீரமல்லு ஆகிய பக்தி படங்களையும் ஊக்குவிக்கவும். இப்படிக்கு அகில உலக விஷ்ணு மஞ்சு அபிமானிகள், தமிழ்நாட்டு கிளை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.‌

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X