புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து கும்பிடும் விஜய் மன்ற நிர்வாகிகள்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!
சென்னை: நடிகர் விஜய் நீண்ட வருடங்களூக்கு பிறகு பனையூரில் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் மீடியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் ரசிக மன்ற நிர்வாகிகளுக்கு மதியம் பிரியாணி விருந்து அளித்ததும் இந்தியளவில் ஹாஷ்டேக்காக டிரெண்டானது.
இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் காலில் ரசிக மன்ற நிர்வாகிகள் விழும் காட்சிகளை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

மாதம் ஒரு முறை சந்திப்பேன்
நடிகர் விஜய் இனிமேல் மாதம் ஒருமுறை தனது ரசிக மன்ற நிர்வாகிகளை சந்திப்பேன் எனக் கூறியுள்ளார் என்றும் அரசியல் குறித்த கேள்விகளுக்கு எல்லாம் விஜய் பதில் அளிப்பார் என புஸ்ஸி ஆனந்த் பத்திரிகையாளர்களுக்கு இன்றைய நிகழ்ச்சி முடிந்த நிலையில் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் விஜய் என்ன பேசினார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் காட்டிய புஸ்ஸி ஆனந்த்
நடிகர் விஜய்யை விட இன்றைய நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் தான் மாஸ் காட்டினார் என நெட்டிசன்கள் பலரும் வெளியான வீடியோக்களை பார்த்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அஜித் - விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் நெகட்டிவ் ஹாஷ்டேக்குகளை டிரெண்டாக்கி சண்டை செய்து வந்தனர்.

காலில் விழுந்த ரசிகர்கள்
புஸ்ஸி ஆனந்த் காலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து டிரெண்டான நிலையில், அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் அதை ஷேர் செய்து போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்
"விஜய்யின் தளபதி புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து கும்பிடும் மன்ற நிர்வாகிகள். விஜய்யை விட செம கெத்து காட்டினார் என்று ரசிகர்கள் பெருமிதம்" என் அந்த வீடியோவை ஷேர் செய்து விஜய் ரசிகர்களுடன் சண்டையை ஸ்டார்ட் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அரசியல் ஆசை
தொடர்ந்து தனது படங்கள் ரிலீஸ் ஆகும் போது பிரச்சனை வருகிற நிலையில், ஒரேயடியாக அரசியலில் களமிறங்கி விட்டால், தனக்கான ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என விஜய் நினைக்கிறாரா? அதனால் தான் இந்த திடீர் அரசியல் ஆசையா? என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











