இதுக்குத்தான் தலீவர் கோல்டன் டிக்கெட்ல கிரிக்கெட் மேட்ச் பார்க்க போறாரு.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ள நிலையில், இதுக்குத்தான் தலீவர் போயிருக்காரு என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சினிமா விமர்சனங்களை தாண்டி சினிமா பிரபலங்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
கார்த்தியின் ஜப்பான் படத்தை கழுவி ஊற்ற இனியும் ஒன்றுமில்லை என்கிற நிலையில், அடுத்ததாக மீண்டும் கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்றுள்ள ரஜினி பக்கம் திரும்பி உள்ளார்.

Blue Sattai Maran trolls why Rajinikanth watch India - Newzealand world cup semi final today

கிரிக்கெட்டில் திடீர் ஆர்வம்: நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக மக்கள் கூடும் மைதானங்களுக்கே சென்று பார்த்து வருகிறார். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ள அரையிறுதி போட்டியை காண உள்ளார். சமீபத்தில் ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில், விஐபிகள் வரிசையில் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்க சென்றுள்ளார்.

லால் சலாம் புரமோஷனா?: மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து லால் சலாம் படத்தை இயக்கி உள்ள நிலையில், திடீரென நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை காண செல்வது அந்த படத்தின் புரமோஷனுக்காகவா என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Blue Sattai Maran trolls why Rajinikanth watch India - Newzealand world cup semi final today

ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்: இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”விளையாட்டுல மதத்தை கலக்காதீங்க' என்று ஆக்ரோஷத்துடன் எச்சரிக்க.. மும்பையில் நடக்கும் அரையிறுதி போட்டியை காண சென்றுள்ளார் தலீவர்.” என ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார்.

தலைவர் 170: ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், திடீரென அந்த படத்திற்கு பிரேக் விடப்பட்டுள்ள நிலையில், ஜிகர்தண்டா குழுவினரை சந்தித்து பாராட்டுவது, கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிப்பது என மற்ற விஷயங்களில் நேரத்தை ஒதுக்கி வருகிறார். தலைவர் 170 மற்றும் தலைவர் 171 என அடுத்தடுத்து ரஜினி நடிப்பில் உருவாக உள்ள படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X