வாழ்த்து சொல்லப்போன தனுஷ் ரசிகர்கள்.. வாங்கிக் கட்டிக்காதீங்க என எச்சரித்த ப்ளூ சட்டை
சென்னை: தமிழ் சினிமாவில் சமீபத்தில் சர்ச்சையின் மறு உருவமாக மாறியுள்ளார் தனுஷ். தனுஷ் நடிப்பில் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் ராயன். இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் இதனை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் நன்றாக ஓடிக்கொண்டு உள்ளது என தனுஷ் நிம்மதியாக இருந்த நேரத்தில் அவருக்கு தலைவலி கொடுக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், " நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ராயன் படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் தொடர்பாகவும் தனுஷ் தொடர்பாகவும் தொடர்ந்து ஏதாவது பதிவிட்டே வருகின்றார். சில பதிவுகளில் தனுஷை வம்புக்கு இழுக்கும் அளவிற்கு பதிவுகளை பதிவிட்டும் வருகின்றார். படத்தின் விமர்சன வீடியோவில் கூட படத்திற்கு ராயன் என பெயர் வைத்ததற்கு பதிலாக குத்தூசி கோவிந்தன் என வைத்திருக்கலாம் என கூறியிருந்தார்.

இந்நிலையில், தனுஷ் கடந்த 28ஆம் தேதி தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடினார். தனுஷைப் பார்க்கவும் அவருக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்கவும் ரசிகர்கள் தனுஷ் புதிதாக வாங்கியுள்ள போயஸ் கார்டன் வீட்டின் முன் திரண்டார்கள். ரசிகர்கள் தன்னைப் பார்க்க வந்துள்ளதை அறிந்த தனுஷ், அவர்களைப் பார்க்க வீட்டில் இருந்து வெளியே வந்தார். மேலும் ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கு ரசிகர் ஒருவர் பரிசு கொடுக்க முன்வந்துள்ளார். ரசிகரை அங்கிருந்த பவுண்சர்கள் தடுக்க, தனுஷ் ரசிகரை நோக்கி முன்னே வந்து பரிசினைப் பெற்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் தனுஷ் புதிதாக வாங்கியுள்ள போயஸ் கார்டன் வீட்டின் முன்னர் ரசிகர்கள் கூடியிருந்தது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பொங்கலுக்கு தலைவரை பாக்க வந்த ரசிகர்கள்...பக்கத்து வீட்டு மேடம் கஷ்டப்பட்டு போட்ட கோலத்தை கலைச்சி விட்டு... சத்தம் போட்டு பிரச்னை பண்ணாங்க. அந்தம்மா வெளிய வந்து எல்லாரையும் வெளுத்து வுட்டாங்க. அடுத்து.. சுள்ளான்களை எந்த பக்கத்து வீட்டுக்காரங்க சுளுக்கெடுக்க போறாங்களோ" என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு அவருக்கு வாழ்த்துகள் சொல்ல வந்த ரசிகர்கள் அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தவே, அது பெரிய செய்தியானது. அதனைக் குறிப்பிட்டு இதுபோன்ற பதிவினை ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











