அடுத்த குடும்பத்தில் கபடி ஆடியவன்..பாலியல் சீண்டல்.. சினிமாவின் அவலம்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: சிவகார்த்திகேயன் டி இமான் விவகாரம், சீனி ராமசாமி, மனிஷா யாதவ் பஞ்சாயத்து என தமிழ் சினிமாவின் பரிதாபமான நிலை குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு இது போதாத நேரம் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சைகள் வெளியே வந்த வண்ணம் உள்ளதால், சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா இணையவாசிகள் இணையத்தில் தாறுமாறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Blue Sattai Maran tweet about kollywood controversy

டி இமான், சிவகார்த்திகேயன்: ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டி இமான், சிவகார்த்திகேயனுடன் இனி சேர்ந்து பயணிக்க வாய்ப்பு இல்லை. அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு டி இமான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், இதற்குகாரணம் சிவகார்த்திகேயன் தான் என, அவர் குறித்து மோசமான செய்தி இணையத்தில் பரவியது.

மனிஷா யாதவ்: இதையடுத்து, சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி, இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க, முதலில் மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால், அவரை படப்பிடிப்புக்காக கொடைக்கானல் அழைத்துச்சென்று சீனு ராமசாமி பாலியல் தொல்லை அளித்ததால், அந்த படத்திலிருந்து மனிஷா விலகியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

பருத்தி வீரன் சர்ச்சை: இந்த இரண்டு பிரச்சனையும் ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க, இயக்குநர் அமீர் பருத்தி வீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் உள்ளது என்றும், சூர்யா தனது துரோகம் செய்துவிட்டதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஞானவேல், அமீர் சொல்வது சுத்த பொய் என்று மீடியாக்கள் முன் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்.

புகையும் பிரச்சனை: இருக்கிற இந்த பிரச்சனை போதா என்று த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய விவகாரம், பிக் பாஸ் வீட்டில் நடிகை விசித்ரா தனது சினிமா வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை கண்ணீர் மல்க பேசியது ஒரு பக்கம் புகைந்து கொண்டு இருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன்: இந்த அனைத்து பிரச்சனை குறித்தும் ப்ளூ சட்டை மாறன் தனது கருத்தை எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், இன்னொருவர் குடும்பத்தில் கபடி ஆடியவன் வெளியே தலை காட்ட மாட்டான். தன்னைப்பற்றிய செய்தி பரவாமல் இருக்க மீடியா மற்றும் சோஷியல் மீடியாவிற்கு வைட்டாக பிரசாதம் தந்து மேட்டரை ஆஃப் செய்வான்‌. உதாரணம் CSK.

உதாரணம் சுகர் ராமசாமி: படத்தில் நடிக்கும் நாயகிகளிடம் பாலியல் சீண்டல் செய்பவன்... அதுபற்றி கேள்வி கேட்கும் அனைவரையும் ப்ளாக் செய்வான். பத்திரிக்கையாளர் பேசிய யூட்யூப் வீடியோவை டெலிட் செய்வான். உதாரணம் சுகர் ராமசாமி.

தப்பு செய்தவர்கள்: இயக்குனருக்கு துரோகம் செய்த தயாரிப்பாளரிடம்.. ட்விட்டரில் பொதுமக்கள் கேள்வி கேட்டால் ரிப்போர்ட் அடிப்பார். உதாரணம் ஞானவால். தப்பு செய்தவர்கள் மட்டுமே இப்படி பதட்டப்படுவார்கள் என தற்போது கோலிவுட்டில் சர்ச்சையாகி இருக்கும் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X