Nayanthara - சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து.. நயன்தாராவை கோர்த்துவிடும் ப்ளூ சட்டை மாறன்?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: Annapoorani (அன்னபூரணி) நயன்தாரா நடித்திருக்கும் அன்னபூரணி ட்ரெய்லரில் இருக்கும் ஒரு வசனத்தை வைத்து ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் ட்ரெண்டாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார்.

Blue Sattai Maran Tweet About Nayantharas Annapoorani Movie Trailer

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.

தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் தற்போது அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார்: படமானது டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த சூழலில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதில் ஒரு இடத்தில் நயனுக்கு படத்தில் தாயாக நடித்திருப்பவர், 'பஸ் கண்டக்டர் எல்லலோருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியாது' என்ற வசனத்தை பேசுகிறார். அதற்கு நயன்தாரா, 'பிடித்ததை செய்தால் எல்லோரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்' என கூறுகிறார்.

ப்ளூ சட்டை ட்வீட்: இந்த வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "'பஸ் கண்டக்டர் எல்லாருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியாது' 'பிடிச்சதை பண்ணா..எல்லாருமே சூப்பர் ஸ்டார் ஆகலாம்' - ஆண் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பேசியுள்ளாரா சூப்பர் ஸ்டார் நயன்தாரா" என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ஏன் பாஸ் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் நயன்தாராவை கோர்த்துவிடுறீங்க என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X