ஆதவ் அர்ஜுனா ஓவர் டேக் அல்லு அர்ஜுன்.. சம்பிரதாயத்தை வச்சு செய்த விஜய்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!
சென்னை: நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜூனா, விகடன் குழுமத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஜய்யின் அதிரடியான பேச்சு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில், இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், மக்களுடன் இருப்பதாக காட்டிக்கொண்டு, சம்பிரதாயத்துக்காக மழை வெள்ளத்தில் நின்று கொண்டு போட்டோ எடுப்பதிலும் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. ஆனால், என்ன செய்வது நாமும் சம்பிரதாயத்துக்கு சில விஷயத்தை செய்யவேண்டியுள்ளது என்றார். மேலும், மக்களுடன் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும், அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுடன் உணர்வுபூர்வமாகவும் எப்போதும் இருப்பேன் என்று அதிரடியாக பேசி இருந்தார்.

ஆதவ் அர்ஜூனா பேச்சு: இதற்கு முன்னதாக பேசிய, ஆதவ் அர்ஜூனா, 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒரே நிறுவனத்தால் எப்படி மொத்த திரையுலகையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. இன்று வரை அதற்கு ஒரு குரல் இல்லை, இந்த குரல் எங்கிருந்து வரவேண்டும். ஏன் சினிமா தொழில் ஒரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. 4,000 கோடி ரூபாய் தொழிலை எப்படி ஒரு நிறுவனம் கட்டுப்படுத்த முடிகிறது. ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய சினிமா எப்படி ஒரே நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தார். தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜூனா, 2026 மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடியாக பேசி இருந்தார்.
அஜித் படத்தின் பெயர் சிம்பிரதாயம்: விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ஆதவ் அர்ஜுன் ஓவர் டேக் அல்லு அர்ஜுன் என பதிவிட்டுள்ளார். மேலும், விஜய் பேசியது குறித்து பதிவிட்டுள்ள அவர், அஜித்தை வைத்து சிறுத்தை இயக்க போகும் படத்தின் டைட்டில்...சம்பிரதாயம்? என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











