கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ..அந்த படத்தின் காபி? ப்ளூ சட்டை மாறனை வச்சு செய்யும் பேன்ஸ்!
சென்னை: கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவு வெளியான நிலையில், அப்படம் 1899 தொடரின் காபி என்று ட்வீட் போட்டுள்ளதை பார்த்து சூர்யாவின் பேன்ஸ் அவரை வச்சு செய்து வருகின்றனர்.
நடிகர் சூர்யாவின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 மணிக்கு கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் இதுவரை பார்த்திராத புதிய லுக்கில் ரசிகர்களை அலறவிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

கங்குவா: சிறுத்த சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சரித்திர கதையாக உருவாகி இப்படம் 3டி வடிவில் பத்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் கங்குவா திரைப்பட சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒருமுக்கியமான படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அட்டகாசமான லுக்: தற்போது வெளியாகி உள்ள கிளிம்ஸ் வீடியோவில் போரில் வீழ்ந்து கிடக்கும் வீரர்களோடு ஆரம்பிக்கும் அந்த வீடியோவில் கையில் தீயோடு அறிமுகமாகிறார் நடிகர் சூர்யா.தொடர்ந்து ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே ஒருவர் மீது சூர்யா ஈட்டியை எறிந்துஅவரை கொல்கிறார். அதே வெறியோடு ஓடிவரும் சூர்யா, நலமா என்று கேட்கிறார். சூர்யாவின் இந்த லுக் உச்சுகொட்டும் அளவுக்கு சும்மா தாறுமாறாக இருக்கிறது.அதே போல வசனங்களும் புது விதமான அனுபவத்தைக் கொடுக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளோடு ஒன்றிப்போகிறது.

முக்கோண Triangle: இந்த கிளிம்ஸ் வீடியோ வெளியானதும் வழக்கம் போல படங்களை வம்பு இழுத்து வாங்கி கட்டிக்கொள்ளும் ப்ளு சட்டை மாறன், கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவின் ஒரு காட்சியும், 1899 தொடரின் போஸ்டரை பதிவிட்டு, That முக்கோண Triangle, எலேய்! என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து கடுப்பான பேன்ஸ் அவரை வச்சு செய்து வருகின்றனர்.
திட்டிதீர்க்கும் நெட்டிசன்ஸ்: ஒரு இணையவாசி, எல்லாம் பாடமும் காப்பி சொன்ன என்ன பன்ன முடியும் என்றும், மற்றொரு அடேங்கப்பா முக்கோணத்தை கண்டுபுடிச்சிட்டியே நல்லா பண்ணியிருக்கான் பையன் என்றும், இதெல்லாம் ஒருவேலையா என கட்டபடி ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











