வயசாகிட்டே போகுதே எப்போ கல்யாணம்.. த்ரிஷாவை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன் !

சென்னை : ப்ளூ சட்டை மாறன் நடிகை த்ரிஷாவை வம்பிழுக்கும் வகையில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை ஜூன் 9ந் தேதி திருமணம் கொண்டு கொண்டார்.

இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் திரைத்துறையே பிரம்மிக்கும் வகையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, விஜய், சரத்குமார் என ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விக்கி – நயன்தாரா திருமணம்

விக்கி – நயன்தாரா திருமணம்

விக்கி - நயன்தாரா திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் தான் தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா விடுத்த கோரிக்கையை அடுத்து ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்துள்ளார். சரியாக 10,25 மணிக்கு இவர்களது திருமணம் நடைபெற்றது.

நல்ல நட்பு

நல்ல நட்பு

சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த, குசேலன் ஆகியப் படங்களில் ரஜினிக்கு நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்ததன் காரணமாக, தங்களது வாழ்வின் மிக முக்கிய தருணத்தில், ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுக்க கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வயசாகிட்டே போதே

வயசாகிட்டே போதே

இந்நிலையில், திரைப்படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்து, நெகட்டிவ் கமெண்டுகளை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு ட்ரெண்டாக்கும் ப்ளூ சட்டை மாறன் தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷாவை வம்பிழுக்கும் வகையில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "என்னம்மா த்ரிஷா நீ எப்ப கல்யாண சாப்பாடு போட போற.. வயசாகிட்டே போதா இல்லையா" என வடிவேலு ஸ்டைலில் கேட்டுள்ளார்.

அடுத்த பயில்வானா ?

அடுத்த பயில்வானா ?

ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவினை பார்த்த தீவிர ரசிகர் ஒருவர், போற போக்க பார்த்தா இது அடுத்த பயில்வான் ஆயிடும் போல என்றும், படங்களை மட்டும் தான் விமர்சித்துக்கொண்டு இருந்தீங்க இப்போ நடிகைகள் குறித்தும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா? என கேட்டு வருகின்றனர்.

Recommended Video

'Trisha மாதிரி நடிச்சிருக்க முடியாது' - Manju Warrier Throw back Interview | Filmibeat Tamil
இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை

லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியான த்ரிஷா க கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயினாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். 39வயதை தொட்டுவிட்ட த்ரிஷா, இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 2016ம் ஆண்டு படத் தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீரென திருமணம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X