விஜய் பேச்சு.. சிவகார்த்திகேயனை இழுத்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.. இவர் தனி ட்ராக்ல போறாரே ப்பா!
சென்னை: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சுதான் சோஷியல் மீடியா எங்கும் இருக்கிறது. அவரது பேச்சை வைத்து பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவரும் நிலையில்; பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்; சிவகார்த்திகேயனை கோர்த்துவிட்டிருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி வருவதால் எஸ்கேவை விஜய் ரசிகர்கள் தாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் ஆண்ட்ரியா, அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, திப்பு, ஹரி சரண், ஹரிஷ் ராகவேந்திரா, எஸ்.பி.பி சரண் என பல பின்னணி பாடகர்களும் பாடகிகளும் கலந்துகொண்டு விஜய்யின் பழைய பட பாடல்களை மேடையில் பாடினார்கள். அதேபோல் பிரபுதேவா உள்ளிட்டோரும் விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடினார்கள்.
விஜய்யின் பேச்சு: இந்த விழாவுக்கு விஜய் கோட் சூட் அணிந்தபடி வந்திருந்தார். அவர் மைதானத்துக்குள் வந்தபோது மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுப்பிய சத்தத்தால் மலேசியாவே ஸ்தம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். விழாவில் பேசிய விஜய், 'எனக்கு ஒன்று என்றால் ரசிகர்கள் தியேட்டர்களில் நின்றார்கள். அடுத்த 33 வருடங்களுக்கு அவர்களுக்காக நான் நிற்கப்போகிறேன். எனக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்த அவர்களுக்காக; சினிமாவை நான் விட்டுக்கொடுகிறேன்' என பேசினார்.

விஜய் அளித்த பதில்: அதுமட்டுமின்றி அவரிடம், சினிமாவில் நீங்கள் விட்டுவிட்டு போகிற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என தொகுப்பாளர்கள் கேள்வியை முன்வைத்தார்கள். அதற்கு பதிலளித்த விஜய்யோ, 'யார் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று மக்களுக்கு தெரியும். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்' என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிலும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் அவரது இந்த பதிலை வைத்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார். அந்த ட்வீட்டில், "திடீர் தளபதிதான் தற்போதைய கோடம்பாக்க தளபதி. அவர் 2031ல் தீபாவளி துப்பாக்கியை 'குட்டி திடீர் தளபதி' கவின் கையில் தருவார். பிறகு தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவார்" என தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'இந்த விஷயத்தில் ஏன் சிவகார்த்திகேயனை தேவையில்லாமல் இழுத்துவிடுகிறார். அவர்களுக்குள் போட்டியே இல்லையே என்றாலும் இவரே கிளப்பிவிடுவார் போல என்று கமெண்ட்ஸை பறக்கவிடுகிறார்கள்.
ஜனநாயகன் Vs பராசக்தி: ஏற்கனவே ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி படம் வருவதால் விஜய்யின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனையும், அவரது ரசிகர்களையும் வறுத்தெடுத்துவருகிறார்கள். அதற்கு எஸ்கேவின் ரசிகர்களும் தங்களால் முடிந்த பதிலடியை கொடுத்துவருகிறார்கள். இப்போது ப்ளூ சட்டை மாறனும் இப்படி ஒரு ட்வீட்டை போட்டு சிவகார்த்திகேயனை கோர்த்துவிட்டிருக்கிறார். இதனால் மீண்டும் இவ்விவகாரம் சோஷியல் மீடியாவில் விவாதமாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











