twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன்டி இந்தியன் படத்தை தடை செய்த தணிக்கைக் குழு.. ப்ளூ சட்டை மாறன் இப்போ என்ன பண்ண போறாரு தெரியுமா?

    |

    சென்னை: கமர்ஷியல் படங்களை கழுவி ஊற்றி விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் 'ஆன்டி இந்தியன்' படம் மூலமாக இயக்குநராக மாறியுள்ளார்.

    Recommended Video

    Vijay's Cycle மாடல் மற்றும் விலை என்ன? | Blue sattai Maran இயக்கிய படத்துக்கு தடை? | Oneindia Tamil

    சமீபத்தில் அவரது படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு சான்றிதழ் வழங்க முடியாது எனக் கூறி தடை செய்து விட்டது.

    இதன் காரணமாக, அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

    சிம்ம சொப்பனம்

    சிம்ம சொப்பனம்

    பெரிய பட்ஜெட் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை ரிலீசான பிறகு பைரஸி தளங்களில் வெளியாகும் பயத்தை விட ப்ளூ சட்டை மாறன் எப்படி கிழித்துத் தொங்க விடப் போகிறாரோ என்கிற பயம் தான் பலருக்கும் உள்ளது. பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இவரது கடுமையான விமர்சனத்திற்கு எதிராக பலமுறை கொதித்தெழுந்துள்ளனர்.

    ரசிகர்கள் அதிகம்

    ரசிகர்கள் அதிகம்

    லேட்டாக விமர்சனம் போட்டாலும், அடுத்த நாள் யூடியூப் டிரெண்டிங்கில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் தான் டாப்பில் வந்து நிற்கும். அந்த அளவுக்கு இவருக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் அதிரடியான விமர்சனங்களை ஆதரித்தும் இவரை கண்டபடி திட்டியும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிவது வழக்கம்.

    பலரது சாபம்

    பலரது சாபம்

    மற்ற விமர்சகர்கள் மற்றும் மக்கள் விரும்பி பார்க்கும் பல திரைப்படங்களையும் விமர்சனம் என்கிற பெயரால் கழுவி ஊற்றியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். படம் எடுத்தால் தான் அந்த வலி தெரியும் என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து விட்ட சாபம் தான் தற்போது இவரது படத்திற்கு வினையாக நிற்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ஆன்டி இந்தியன்

    ஆன்டி இந்தியன்

    விமர்சகராக கலக்கி வந்த ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் அவதாரம் எடுத்து ஆன்டி இந்தியன் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் தலைப்பில் தொடங்கி ஏகப்பட்ட சர்ச்சை கருத்துக்களும் வசனங்களும் படம் நெடுகிலும் உள்ள நிலையில், படத்தை பார்த்த தணிக்கைக் குழு, கட் கொடுக்காமல் தடை விதித்து விட்டது.

    தடை விதித்த தணிக்கைக் குழு

    தடை விதித்த தணிக்கைக் குழு

    இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ஜிப்ஸி படத்திற்கும் இது போன்ற தணிக்கை பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. பாதி படத்திற்கும் மேல் சென்சார் செய்து கடைசியில் வெளியான ஜிப்ஸி படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் படத்திற்கும் தற்போது அது போன்ற சூழ்நிலை உருவாகுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    மேல் முறையீடு

    மேல் முறையீடு

    கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஆன்டி இந்தியன் படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்தை முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதன் காரணமாக மறு சீரமைப்புக்கான திருத்த குழுவிடம் மேல் முறையீடு செய்ய உள்ளோம், உரிய நேரத்தில் இந்த படம் வெளியாகும் என்றும் ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஆதரவும் எதிர்ப்பும்

    ஆதரவும் எதிர்ப்பும்

    கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இப்படியொரு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ப்ளூ சட்டை மாறன் அரசியல்வாதிகளை நல்லா வச்சு செய்திருக்காரு போல அதனால் தான் இந்த படத்திற்கு இப்படியொரு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று அவருக்கு ஆதரவாகவும், சோன முத்தா போச்சா, பேச்சா பேசுனா இப்போ படத்தை எப்படி ரிலீஸ் பண்ண போற என எதிராகவும் கருத்துக்கள் வைரலாகி வருகிறது.

    ஒடிடியில் வெளியிடுங்க

    ஒடிடியில் வெளியிடுங்க

    அட தியேட்டரில் ரிலீஸ் பண்ணத் தானே தணிக்கை சான்று வாங்க வேண்டும், நீங்க பேசாம ஒடிடியில் ரிலீஸ் பண்ணுங்க, நாங்க படத்தை ஓட விடுகிறோம் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் முழு வீரியத்துடன் வெளியாகுமா? இல்லை ஏகப்பட்ட கட்கள் கொடுக்கப்படுமா? ஒடிடியில் ரிலீஸ் செய்யப்படுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

    English summary
    Blue Sattai Maran tweeted, “Censor Board team. refused Anti Indian film. As a result, We have decided to approach the revising committee for reconsideration. The film will be released at appropriate time.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X