Blue Sattai Maran: தலைவர் சம்பளம் 300 கோடி.. நெல்சனுக்கு 100 கோடி.. ப்ளூ சட்டை மாறன் பகீர் ட்வீட்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் 300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் புதிய ட்வீட் ஒன்றை போட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பில் இருந்து அந்தப் படத்தைப் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்களை பதிவிட்டு வந்த ப்ளூ சட்டை மாறன் இனிமேல் தானும் பாக்ஸ் ஆபீஸ் வடைகளை சுடப் போவதாக அறிவித்து இருந்தார்.

ரஜினியை விடாத ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் கோலிவுட்டையே ஆட்டம் காண வைக்கும் வகையில் உள்ளது. ஜெயிலர் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் 80 கோடி என முதலில் தகவல்கள் வெளியாகின. ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூலை ஈட்டிய நிலையில் அந்த படத்தின் லாபத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்துக்கு 100 கோடி ரூபாய்க்கான செக்கை கலாநிதி மாறன் வழங்கினார் என கூறப்பட்டது.
அடுத்த படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 200 கோடி ரூபாயிலிருந்து 250 கோடி ரூபாய் வரை தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக ஏகப்பட்ட தகவல்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன. இந்நிலையில் அதைவிட அதிகமாக உருட்டுகிறேன் பாருங்கள் என ப்ளூ சட்டை மாறன் அதிரடியாக ட்வீட் ஒன்றை போட்டு பகீர் கிளப்பியுள்ளார்.

சூடான மழைக்கால வடைகள்: தலைவர் சம்பளம் 300 கோடியாக உயர்வு. Paddy Sun சம்பளம் இனி 100 கோடி என ப்ளூ சட்டை மாறன் ரஜினியின் சம்பளம் 300 கோடி என்றும் நெல்சன் சம்பளம் 100 கோடி என வடைகளை சுட்டு கோடம்பாக்கம் சமஸ்தானத்தையே ஆட்டம் காண வைத்துள்ளார்.
ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு ஜவான் பக்கம் தாவி விட்டார் ப்ளூ சட்டை மாறன் என கூறப்பட்டு வந்த நிலையில், அவ்வளவு எளிதாக ஜெயிலர் படத்தையும் நடிகர் ரஜினிகாந்தையும் விடமாட்டேன் என்பதற்கு பதில் அளிக்கும் வகையில் இப்படி ஒரு கிசுகிசு டைப் ட்வீட்டை ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ளார்.
எப்போதான் இதுக்கு எண்ட் கார்டு போடுவீங்க ப்ளூ சட்டை மாறன் என்றும் அவர் எவ்வளவு வாங்குனா உங்களுக்கு எங்க எரியுது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











