கூலி ரிசல்ட்.. விஜய்யை பார்த்து ஏன் கதறுறீங்க?.. ரஜினி ரசிகர்களை வம்புக்கிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ரஜினிகாந்த் நடித்திருந்த கூலி திரைப்படம் பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. லோகேஷ் கனகராஜை எவ்வளவு ட்ரோல் செய்ய முடியுமோ அவ்வளவு ட்ரோல் செய்துவருகிறார்கள் ரசிகர்கள். ஸ்டார் ஹீரோக்களை வைத்து இயக்குகிறேன் என லோகி வீணாகிவிட்டார் என்றெல்லாம் பேசிவருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க ரஜினியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடவே செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடித்த படம் என்றாலே எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். அதுவும் லோகேஷ் கனகராஜோடு அவர் கூலி படத்தில் இணைந்திருந்ததால் அந்த ஹைப்புகள் எல்லாம் அவ்வளவு இருந்தன. எப்படியும் இரண்டு பேரும் சேர்ந்து தரமான சினிமாவை கொடுப்பார்கள்; லோகி இதுவரை இல்லாத மாதிரி ரஜினியை காட்டுவார் என்றெல்லாம் ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கையை பட அறிவிப்பு வந்ததிலிருந்தே கொண்டிருந்தார்கள்.
வந்த படம்; நொந்த ரசிகர்கள்: படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸானது. ஏற்கனவே கொண்டிருந்த நம்பிக்கையை மலை போல் சுமந்துகொண்டு தியேட்டருக்கு சென்று அமர்ந்தார்கள். அந்த மலை போன்ற நம்பிக்கையை படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே இயக்குநர் அடித்து நொறுக்கிவிட்டார். அரத பழசான கதையை; எந்த சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதையாக எழுதி ஒப்பேற்றிவிட்டார். இதனால் தங்கள் தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான் ரசிகர்களுக்கு.

ஓவர் டோஸ்: கைதி, விக்ரம் படங்களில் லோகேஷ் பயன்படுத்தியிருந்த ரெட்ரோ பாடல்கள் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றன. அதையே தனது ஃபார்முலாவாகவும் மாற்றினார் அவர். அந்த ஃபார்முலா கூலியில் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ட்விஸ்ட் வைக்கிறேன், ரஜினியை மாஸாக காண்பிக்கிறேன் என யோசித்த அவர்; லாஜிக்குகளில் கவனம் செலுத்தவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. எது எப்படியோ லியோவுக்கு பிறகு கூலியும் இயக்குநருக்கு விமர்சன ரீதியாக அடியைத்தான் கொடுத்திருக்கிறது.
விஜய் Vs ரஜினி: இதற்கிடையே கூலி படம் வெளியானதிலிருந்தே லியோ படத்தின் கலெக்ஷன் சாதனையை முறியடித்துவிட்டதா என்றுதான் பலரும் தேடினார்கள். லியோ முதல் நாளில் 148 கோடி ரூபாயை வசூலித்தது. கூலி 151 கோடி ரூபாயை வசூலித்தது. இதுவரை இப்படம் மொத்தம் 400 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துவிட்டது. அதேசமயம் இதெல்லாம் போலிதான். இவ்வளவெல்லாம் படம் வசூலித்திருக்க வாய்ப்பே இல்லை என ஒருதரப்பு ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சில விஜய் ரசிகர்களும் கூலியை கிண்டல் செய்துவருகிறார்கள். அதேசமயம் முதல் நாளில் மட்டுமின்றி இதுவரை மொத்த வசூலில் உலக அளவில் லியோவை அசால்ட்டாக கூலி தூக்கி சாப்பிட்டுவிட்டது என்று ரஜினியின் ரசிகர்கள் தக்க பதிலடியை கொடுத்துவருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "கழுகு குஞ்சுகள்:
மாஸ்டரை வீழ்த்திய ஜெயிலர். லியோ கலக்சனை தாண்டிய கூலி. உங்க தலைவரை இந்திய சூப்பர் ஸ்டார்னு சொல்றீங்க. அப்படி பாத்தா அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் கூடத்தான மோதனும்? உங்க தலைவரை விட வயசுலயும், சினிமா அனுபவத்துலயும் பல வருசம் சின்னவரா இருக்கற விஜய்யை பாத்து ஏன் ஓயாம கதறிட்டு இருக்கீங்க?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











