ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் ரிலீஸ்.. புலம்ப ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்.. எல்லாம் போச்சு!

சென்னை: ரஜினிகாந்த் தன்னை ஜெயிலர் சக்சஸ் பார்ட்டிக்கு அழைத்ததாகவும் அங்கே நடந்த சர்ச்சைக்குரிய விஷயத்தை வீடியோவாக வெளியிடப் போகிறேன் என இன்று காலை உருட்டிய ப்ளூ சட்டை மாறன் அதன் பின்னர் காமெடி வீடியோவை மட்டுமே வெளியிட்டு எதிர்பார்த்த தனது கொஞ்ச ரசிகர்களையும் ஏமாற்றி விட்டார்.

ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்களான ரமேஷ் பாலா, மனோ பாலா, தயாரிப்பாளர் தனஞ்செயன் என யார் பேசினாலும், வடை, வடைன்னு கடந்த ஒரு வாரமாக காதல் பரத் போல சுற்றித் திரிந்த ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விட்டது.

Blue Sattai Maran tweeted with Sun Pictures official Jailer report

பீஸ்ட் படத்துக்கு கூட இப்படி சொல்லவில்லையே, ஜெயிலர் படத்துக்கு மட்டும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்து விட்டதே என விஜய் ரசிகர்களும் பயங்கர காண்டில் உள்ளனர்.

அஃபிஷியல் அப்டேட்டே வந்துடுச்சு: ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் 375 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே தற்போது அதிகாரப்பூர்வ ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களையும், ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட ரஜினி ஹேட்டர்களையும் கதற விட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்காது என்கிற நினைப்பில் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் சொன்ன வசூல் நிலவரத்தை எல்லாம் வடை வடை என ப்ளூ சட்டை மாறன் வடை சுட்டு வந்த நிலையில், தற்போது ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்களை ஏமாற்றிய ப்ளூ சட்டை மாறன்: ஏதோ உண்மை சம்பவத்தை சொல்வது போல பொய்யான விஷயத்தை ஆங்கிலத்தில் அத்தனை பெரிய கட்டுரையாக போட்டு தன்னை நம்பிக் கொண்டிருந்த கொஞ்ச ரசிகர்களையும் ப்ளூ சட்டை மாறன் கடைசியில் ஏமாற்றி விட்டார் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் எல்லாம் உங்களை ஒரு ஆளாகவே மதிக்கமாட்டார் என்றும் கடைசி வரை காக்கா போல கத்த வேண்டியது தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதற்கு மேல் ப்ளூ சட்டை மாறன் உண்மையே சொன்னாலும், நம்ப மாட்டாங்களே என்றும் ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பொட்டி வந்துடுச்சு: ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக ஜெயிலர் படத்தின் வசூல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இந்தா பாரு ப்ளூ சட்டை மாற பொட்டி வந்துடுச்சு, சன் பிக்சர்ஸும் வடை சுடுறான் என புதுசா ஒரு ட்வீட் போட்டு விடு தமாஷா இருக்கும் என ரஜினி ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

புலம்பும் ப்ளூ சட்டை மாறன்: "பொதுவாக அனைத்து தயாரிப்பு நிறுவனமும் உண்மையான வசூல் நிலவரத்தை சொல்வதில்லை. குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த ஏரியா, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் என்ன கலெக்சன் என்று புள்ளிவிவரத்துடன் கூறியதில்லை.

ரவுண்டாக ஒரு ஊத்தாப்பம் போடுவார்கள். 50, 75, 100 கோடிகள் என்று.

அல்லது ஒரு சக்ஸஸ் (Sarcastic) மீட் வைத்து கொண்டாடுவார்கள். அதில் பெரும்பாலும் வசூல் தொகையை குறிப்பிடுவதில்லை. படம் சக்ஸஸ். நம்புங்க என்று சொல்வதோடு சரி.

இதோ இப்போது ஒருவார கலெக்சன் 375.40 கோடி என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tentative. Still uploading என்று ஒரு சிறிய குழப்பத்துடன்.

இது ஒருவார வசூல் குறித்த Tentative. Still uploading ஆ அல்லது அடுத்த கட்ட வசூலுக்கான Tentative. Still uploading ஆ என்று தெளிவாக கூறியிருக்கலாம்.

சரி. இப்போதைக்கு இதுவே உண்மையான ரிப்போர்ட் என நினைத்து இதையே ஒருவார கலக்சனுக்கான அளவுகோலாக வைத்து கொள்வோம். இதன்படி ஒப்பிட்டால்...

ஒரு வாரத்திற்குள் 400 கோடி, 450, 500, 600 கோடி என்று பலர் அள்ளி விட்டார்களே!! அதெல்லாம் பச்சை பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதுதானே உண்மை?

Box Office Trackers, Social media Influencers, Youtube பேட்டி தந்த பெரியப்பாக்கள் இதுவரை சுட்டது எல்லாம் போலி வடைகள்தான் என்று ஓயாமல் சொல்லி வந்தேன்.

அதற்கு 'வன்மத்தை கக்குகிறான். வயித்தெரிச்சல்' என இந்த கோஷ்டிகளில் பலர் சவுண்ட் விட்டார்கள். பருந்துக்குஞ்சுகள் உட்பட.

இப்போது இவர்களின் முகத்திரை கிழிந்து தொங்கி விட்டது. இதற்கு முன்பு பல படங்களின் வசூலை இவர்கள் போலியாக அள்ளி விட்டார்கள் என்பதை இனியாவது நம்பவும்.

எனக்கு வந்த கமண்ட்களில் 'இவர்கள் சொல்வது பொய்யென்றால்.. நீங்களாவது உண்மையான ரிப்போர்ட்டை சொல்லுங்கள்' என பலர் கேட்டனர். அதற்கு நான் தந்த பதில் ஒன்றுதான்.

Blue Sattai Maran tweeted with Sun Pictures official Jailer report

'Let us wait for few more days'

அனைத்து போலி பாக்ஸ் ஆபீசர்களின் வண்டவாளங்களும் இன்றாவது தண்டவாளத்தில் ஏற்றப்பட்டதில் மகிழ்ச்சி.

மீண்டும் கூறிக்கொள்வது.

தயாரிப்பு தரப்பு கூறியுள்ள கலெக்சன் ஒரு ஒப்பீட்டிற்கான அளவுகோல் மட்டுமே. அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உண்மையான வசூலை சொல்வதில்லை. ரவுண்டாக ஒரு ஊத்தாப்ப போஸ்டர் மட்டுமே!!

அப்படி ரவுண்டு கட்டாமல் ஒரு ரிப்போர்ட்டை சன் பிக்சர்ஸ் தந்திருப்பது சிறு ஆறுதல்.

கமலின் விக்ரம் வசூல் 420+ கோடியை ஜெயிலர் ஒரே வாரத்திற்குள் தாண்டியது என்று பொய் சொன்ன வடை வாயர்களே.. வசமா மாட்டுனீங்க.

இனி உங்க கலக்சன் ரிப்போர்ட் மக்களிடம் எடுபடாது." என ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X