ஹலோ CM ஃப்ரெண்டு நானு.. விஜய் தொடங்கிய அரசியல் கட்சி.. அஜித்தை வைத்து ப்ளூ சட்டை போட்ட ட்வீட்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்றும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை அடுத்து அஜித்தை வைத்து ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் மீம் ஒன்று ரசிகர்களிடம் கவனத்தை பெற்றிருக்கிறது.
விஜய் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம்கூட 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். பவதாரிணி உயிரிழப்பால் படத்தின் ஷூட்டிங் இடையில் சில நாட்கள் தடைபட்டது. அதனையடுத்து மீண்டும் இப்போது ஷூட்டிங் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் என்ட்ரி: விஜய் GOAT படத்தில் கமிட்டானபோதே அதுதான் அவருடைய கடைசி படம். விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பலரால் கூறப்பட்டது. அதற்கெல்லாம் விஜய் அமைதியாக இருந்தார். தீடிரென சில நாட்களுக்கு முன்பு, 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்குவதாக எந்தவித அலட்டலும் இல்லாமல் சிம்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துவிட்டார். மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் வேலைகளும் ஆரம்பித்திருக்கின்றன.
படத்துக்கு நோ: தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்த கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போடும் திட்டத்தையும் அவர் கையில் எடுத்திருக்கிறார். இன்னும் ஒரு படத்தில் மட்டும் பணியாற்றிவிட்டு முழுக்க முழுக்க மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்று அவர் அறிவித்ததால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கின்றனர். அதேசமயம் விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிப்பார் என்று இன்னொரு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில்: விஜய் இப்போது அரசியல் கட்சி தொடங்கிவிட்டாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி போட்டியிடவும் இல்லை; வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு எடுத்திருக்கிறார். அநேகமாக அந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்றும்; அதில் மக்களின் பல்ஸை பார்த்துவிட்டு அடுத்தடுத்த தேர்தல்களில் விஜய் கூட்டணியை நோக்கி நகரலாம் என்றும் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.
ப்ளூ சட்டை போட்ட மீம்: விஜய் அரசியல் கட்சியை தொடங்கியதை அடுத்து அஜித்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வெளியாக தொடங்கியிருக்கின்றன. அதில் ஒன்றாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த மீமில், போக்குவரத்து காவலர் ஒருவர் அஜித்திடம் வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்பது போன்றும் அதற்கு அஜித், 'நான் சி.எம் ஃப்ரெண்டு' என்று சொல்வது போன்றும் விஷயம் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல் இன்னொரு மீமில் விஜய் முதலமைச்சர் ஆனால் அஜித்தான் சுற்றுலா துறை அமைச்சர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விடாமுயற்சி: அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் முதற்கட்டமாக அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு லொக்கேஷன் பார்க்கும் பணிகள் மும்முரமடைந்துள்ளன. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











