மன்னிப்பு கேட்ட மணிரத்னம்.. தக் லைஃப் இயக்குநரை விரட்டிவந்த ப்ளூ சட்டை மாறன்.. இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. திரிஷா, சிம்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருந்த அந்தப் படம் படுதோல்வியைத்தான் சந்தித்தது. பலரும் படத்தை கடுமையாக ட்ரோல் செய்த சூழலில்; இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கமல்ஹாசனும், மணிரத்னமும் நாயகன் படத்துக்கு பிறகு இணைந்த படம் தக் லைஃப். இதில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. கண்டிப்பாக நாயகன் படம் போல் ஒன்றை கமலும், மணிரத்னமும் கொடுப்பார்கள் என்றே ரசிகர்கள் நினைத்திருந்தார்கள்.
காண்டான ரசிகர்கள்: ஆனால் அவர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புக்கு படம் கொஞ்சம்கூட நியாயம் செய்யவில்லை. கதை, மேக்கிங் என எதிலுமே ஒன்றுமே இல்லை என ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். இந்தப் படத்தின் கதையை கமல்ஹாசன் எழுதியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. அதையும் கையில் எடுத்த ரசிகர்கள் இந்தக் கதைக்குத்தான் இவ்வளவு பெரிய பில்டப்பை கொடுத்தார்களா என கேள்வி எழுப்பி விளாசி தள்ளினார்கள்.
முத்த மழையும் இல்லை: சரி படம்தான் அந்த நிலைமையில் இருந்தது; அனைவரையுமே கவர்ந்த முத்த மழை பாடலையும் படத்தில் வைக்கவில்லை. இதனையும் கண்டித்த ரசிகர்கள் படத்தில் உருப்படியான விஷயம் என்றால் அந்தப் பாடல்தான்; அதையும் வைக்கவில்லையே என்று கூறினார்கள். தொடர்ந்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது. அதை பார்த்து மேற்கொண்டு டென்ஷனான ரசிகர்கள் நல்லவேளை அப்பாடலை படத்தில் வைக்கவில்லை என்று ட்ரோல் செய்துவிட்டார்கள்.
மணிரத்னம் மன்னிப்பு: இப்படி தக் லைஃப் படத்தை ஒட்டுமொத்த கிழித்துவிட்டார்கள் ரசிகர்கள். சூழல் இவ்வாறு இருக்க இயக்குநர் மணிரத்னமோ, "இன்னொரு முறை நாயகன் படத்தை எடுக்க வேண்டும் என்பது எனக்கும் கமலுக்கும் எண்ணம் இல்லை. அப்படிப்பட்ட படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்களுக்கு வித்தியாசமான திரைப்படத்தை கொடுக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் ரசிகர்களோ முழுக்க முழுக்க வேறுபட்ட படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் மணிரத்னம் மன்னிப்பு கேட்டது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "எப்போதும் தற்பெருமை பேசியதில்லை. Pre release event மற்றும் பேட்டிகளில் சப்ஜெக்ட் பற்றி மட்டுமே பேசுவார். தக் லைஃப் தோற்றதில் கமலுக்கும் சமபங்கு இருந்தாலும்.. ரசிகர்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுள்ளார் மணிரத்னம். இயக்குனர் பாலாவும் இதே ரகம்தான். படைப்புதான் பேச வேண்டும்.
அறுக்காதீர்கள்: படத்தை எடுத்தவர்களும், நடித்தவர்களும் தற்பெருமை பேசி அறுக்க கூடாது. ரிலீஸ்க்கு முன்பாக மேடைகளில் ஓவர் பில்ட் அப் செய்தும், மறுநாளே சக்ஸஸ் மீட் கொண்டாடுவது என கோமாளித்தனங்கள் செய்தும் மொக்கை போடும் நடிகர்கள், இயக்குனர்கள்.. மணிரத்னம் போன்றோரை பார்த்தாவது திருந்தி தொலைவது நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் ட்ரோல் மெட்டீரியல் ஆவதற்கு நீங்களே காரணமாவதை தடுக்க இயலாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications