மகள் பார்த்த வேலை.. மலையாள படத்திடமே தமிழ்நாட்டில் அடி வாங்கிய ரஜினி படம்.. ப்ளூ சட்டை மாறன் தாக்கு!

சென்னை: லால் சலாம் படத்தின் வசூலை தமிழ்நாட்டிலேயே மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் முறியடித்து விட்டதாக ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். தர்பார், அண்ணாத்த படங்களின் படுதோல்விக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் எனும் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், யோகி பாபு, வசந்த் ரவி, மிர்ணா, ரித்து ராக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்து அந்த படத்தை வெளியிட்ட அனைத்து திரையரங்குக்கும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்த காரணமாக அமைந்தது.

Blue Sattai Maran tweets Manjummel Boys beats Rajinikanth s Lal Salaam at Tamil Nadu Box Office

அனிருத் மீது குறை: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு நெல்சன், ரஜினிகாந்தை விட அனிருத்தின் காவாலா மற்றும் ஹுகும் பாடல்களுக்கு அமைத்த இசை மற்றும் பின்னணி இசை தான் காரணம் என ரஜினிகாந்தே பாராட்டினார். ஆனால், அனிருத்தின் கொலவெறி பாடல் தான் தனது 3 படத்தையே ஓவர்ஷேடோ செய்து விட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அந்த படத்தின் தோல்விக்கு அனிருத் தான் காரணம் என்பது போல பழியை அவர் மீது போட்டிருந்தார்.

அப்பா மீது பழி: அதே போல தற்போது லால் சலாம் எனும் நல்ல படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனும் இமேஜ் ஓவர்ஷேடோ செய்து விட்டதாக மீண்டும் படத்தின் தோல்விக்கான பழியை அப்பா மீது அப்படியே திருப்பி விட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ராஜமெளலி ஒருமுறை பேசும் போது ரஜினிகாந்த் படத்தை தான் இயக்கினால் ஒவ்வொரு சீனுக்கும் விசில் பறக்கும் என்றார். சூப்பர் ஸ்டார் கிடைத்தும் சரியாக பயன்படுத்தாமல் அவர் மீது அவர் மகள் இப்படி குறைகளை அடுக்குகிறாரே என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விமர்சித்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் தாக்கு: லால் சலாம் திரைப்படத்தை விட மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழ்நாட்டிலேயே அதிக வசூல் ஈட்டியுள்ளது என தற்போது கம்பேரிசன் ட்வீட் போட்டு ரஜினிகாந்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார். ஜெயிலர் படத்தின் கிட்டே மஞ்சுமெல் பாய்ஸ் நிற்க முடியுமா? இதில், ரஜினிகாந்த் வெறும் கேமியோ ரோல் தான் என தலைவர் ரசிகர்கள் படை திரண்டு கமெண்ட் பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Blue Sattai Maran tweets Manjummel Boys beats Rajinikanth s Lal Salaam at Tamil Nadu Box Office

பாக்ஸ் ஆபிஸ் போட்டி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்து வெளியான லால் சலாம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 16 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், தமிழ்நாட்டிலேயே மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 17 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X