உதயநிதி முதல்வராகும்போது இதை சொல்வீர்களா மிஸ்டர் செல்லம்?.. பிரகாஷ் ராஜுக்கே #JustAsking போட்ட மாறன்!

சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அரசியல் பேசக்கூடாது என்றும் பேசும் வாதங்கள் என்றுமே தமிழ்நாட்டில் எடுபடாது. இந்நிலையில், விஜய்யை நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று விமர்சித்து பேசிய நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Just Ask ஹாஷ்டேக் போட்டு மோடிக்கு எதிரான கேள்விகளை தொடர்ந்து பிரகாஷ் ராஜ் எழுப்பி வருகிறார். ஆனால், திமுகவில் நடக்கும் ஊழல்கள் குறித்தும், போதைப்பொருள் கலாச்சாரம் குறித்து பிரகாஷ் ராஜ் எந்தவொரு கேள்வியையும் இதுவரை எழுப்பவில்லையே என அவருக்கு தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Blue Sattai Maran uses JustAsking against Prakash Raj over his hatred against Vijay s Politics

கில்லி, சிவகாசி, வில்லு, போக்கிரி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் இப்போ அரசியலிலும் விஜய்க்கு வில்லனாக மாறியுள்ளார் என்றும் விஜய்யை பார்த்து நீங்க கேட்ட கேள்விகளை உதயநிதியை பார்த்து கேட்க முடியுமா என ப்ளூ சட்டை மாறன் விளாசியுள்ளார்.

Blue Sattai Maran uses JustAsking against Prakash Raj over his hatred against Vijay s Politics

விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜ்: திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள சிபிஐஎம் கட்சிக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார் பிரகாஷ் ராஜ். நடிகனை பார்த்து விசிலடிக்கலாம். ஆனால், நாட்டை கொடுக்க முடியாது என பிரகாஷ் ராஜ் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விவாத பொருளாக மாறியுள்ளது. ஒரு நடிகரே இப்படி நடிகனுக்கு நாட்டை கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டு அரசியல் பேசலாமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உதயநிதியை பார்த்து கேப்பீங்களா?: "ரஜினியும், கமலும் தனிக்கட்சி ஆரம்பித்து.. தமிழ்நாட்டை ஆள கிளம்பியபோது இதை பேசினீர்களா? நடிகராக இருந்த உதயநிதி நாளை முதல்வராகும்போது இதை சொல்வீர்களா மிஸ்டர் செல்லம்?" என ப்ளூ சட்டை மாறன் #JustAsking போட்டு பிரகாஷ் ராஜுக்கு செக் வைத்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து ஹீரோவான உதயநிதி ஸ்டாலின் கடைசியாக மாமன்னன் படம் வரை நடித்து விட்டு இப்போ துணை முதல்வராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே ஆரம்ப காலத்தில் சீரியல்களில் நடித்த நடிகர் தானே என்றும் பிரகாஷ் ராஜை தவெகவினர் விளாசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X