Veera Dheera Sooran: ரொம்ப ரொம்ப சுமாரான படம்.. வீர தீர சூரன் படத்தை முடித்து விட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் நேற்று பல போராட்டங்களை கடந்து வெளியாகி இருக்கும் வீர தீர சூரன் படம் தில், தூள், சாமி ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் ஒருபக்கம் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை இந்த படம் ரொம்ப ரொம்ப சுமாரான படம் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் சொல்லி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் வீர தீர சூரன்.

சியான் விக்ரமின் நடிப்பு மிரட்டல் என்றும் படத்தை அருண் குமார் தரமாக செதுக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வரும் நிலையில், ஆரம்பத்தில் படம் அப்படி இருந்தது உண்மை தான். ஆனால், 2ம் பாதி படம் சூர மொக்கை என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் போட்டு பொளந்திருக்கிறார்.
ரொம்ப ரொம்ப சுமார் படம்: விக்ரமுக்கு இந்த படமாவது பிளாக்பஸ்டர் படம் என ப்ளூ சட்டை மாறன் வாயால் சொல்வார் என எதிர்பார்த்து அவருடைய விமர்சனத்தை பார்த்த விக்ரம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக கடுப்பாகி இருப்பார்கள். வீர தீர சூரன் படம் ரொம்ப சூப்பரான படமெல்லாம் இல்லை என்றும் ரொம்ப ரொம்ப சுமாரான படம் என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் கொடுத்திருக்கிறார்.
இடைவேளையில் ரொமான்ஸ் தேவையா?: முதல் பாதி முழுவதும் சிறப்பாகவே படம் சென்றது. இடைவேளை காட்சியின் போது படத்தை வேறமாதிரி கொண்டு வந்து நிறுத்துவாங்க என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீரென 10 வருஷத்துக்கு முன்பு எனக் கூறிவிட்டு ஹீரோயின் துஷாரா விஜயன் உடன் விக்ரம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை காட்டுகின்றனர். இப்போ இந்த சீரியஸான படத்தில் சியான் விக்ரம் ரொமான்ஸ் செய்வது தான் முக்கியமா? என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதெல்லாம் சூப்பர்: சியான் விக்ரமின் நடிப்பு படம் முழுக்க சிறப்பாகவே உள்ளது. எஸ்.ஜே. சூர்யா என்கவுன்ட்டர் எப்படி செய்யலாம் என பிளான் போடும் இடமும் சுராஜ் வெஞ்சரமுடு சியான் விக்ரமை சந்தேகப்பட்டு கேள்விக் கேட்கும் இடமெல்லாம் படத்தில் சிறப்பாக உள்ளது. அது போல ஒரு 10 நல்ல சீன் இருந்திருந்தால் கூட படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும். ஆனால், இயக்குநர் அருண் குமார் திரைக்கதையில் ரொம்பவே கோட்டை விட்டுவிட்டார் என வறுத்தெடுத்துள்ளார்.
மதுர வீரன் பாட்டு தேவையா?: வீர தீர சூரன் திரைப்படம் ரொம்பவே சீரியஸான படம் வில்லன் கேங்கை எஸ்.ஜே. சூர்யா என்கவுன்ட்டர் செய்ய காத்திருக்க, அவர்களை காப்பாற்ற சியான் விக்ரம் காலில் விழுந்து கேட்டதும் அவரும் பழைய முதலாளிக்காக அமைதியான வாழ்க்கையில் இருந்து மீண்டும் சம்பவம் செய்ய களமிறங்குகிறார். இப்படியொரு சீரியஸான படத்தை ஸ்பூஃப் படம் பண்ணுவது போல தூள் படத்தில் இடம்பெற்ற "சிங்கம்போல நடந்து வரான் செல்லப்பேராண்டி" பாடலை போடலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அந்த பாட்டுக்குத்தான் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என கமெண்ட் பக்கத்தில் சியான் விக்ரம் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











