Blue Sattai Maran: “மார்க் ஆண்டனில எதுவுமே கிடையாது... ஆனா படம் அந்த மாதிரி”: ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று வெளியானது.

விஷாலுடன் எஸ்ஜே சூர்யா லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் டைம் ட்ராவல், ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடியாக இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

 Blue Sattai Maran: Vishal and SJ Suryah starring Mark Antony film Blue Sattai Maran Review

மார்க் ஆண்டனி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் வைரலாகி வருகிறது.

1970களில் தொடங்கும் இந்த கதையில் சயின்டிஸ்ட்டான செல்வராகவன், ஒரு டைம் ட்ராவல் போன் கண்டுபிடிக்கிறார். அதன் மூலம், கடந்த காலத்துக்கும், எதிர் காலத்துக்கும் பேச முடியும். இந்த சந்தோஷத்தில் செல்வராகவன் பாருக்குச் செல்ல, அங்க இரண்டு கேங்ஸ்டர் குரூப்க்கு இடையே சண்டை நடக்கிறது. அப்போது, விஷால் கொலை செய்யப்படுகிறார், அதன் பின்னர் விஷாலின் மகனான ஜூனியர் விஷாலை எஸ்ஜே சூர்யா வளர்க்கிறார்.

எஸ்ஜே சூர்யாவும் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அப்பா கெட்டவர் என நினைத்துக்கொண்டிருக்கும் மகன் விஷாலுக்கு, ஒருகட்டத்தில் டைம் ட்ராவல் மெஷின் மூலம் உண்மைகள் தெரியவருகிறது. அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் மொத்த கதை. சயின்ஸ் பிக்‌ஷன், டைம் ட்ராவல் கதை என்றாலும், அதுபற்றியெல்லாம் விளக்கம் கொடுக்காமல் திரைக்கதையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் புகுந்து விளையாடியுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

மேலும், முதல் பாதி அப்படி இப்படி என இருந்தாலும், திடீரென படம் எஸ்ஜே சூர்யாவின் கன்ட்ரோலுக்கு சென்றுவிடுகிறது. அதன்பின்னர் தான் படத்தின் வேகம் சூடு பிடிக்கிறது. எஸ்ஜே சூர்யா நடிப்பில் அதகளம் செய்துள்ளார், முக்கியமாக சில்க் ஸ்மிதா சீனில் டபுள் ஆக்டிங் செய்து தியேட்டரையே வெடிக்க வைத்துள்ளார். போனில் பேசும் சீன் உட்பட பல காட்சிகளில் எஸ்ஜே சூர்யா தான் மாஸ் காட்டியுள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார்.

அதேபோல், மார்க் ஆண்டனி படத்தின் கதை ஒன்னும் அவ்வளவு பிரமாதமானது கிடையாது. ரொம்பவே சிக்கலான கதையை கச்சிதமாக சொன்னவிதத்தில் படம் ரசிக்க வைக்கிறது என்றுள்ளார். குழப்பங்கள் இல்லாமல் ட்விஸ்ட் வைத்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால், படத்தில் நடிப்பு, வசனம், மியூசிக், சவுண்ட்ஸ் என எல்லாமே கொஞ்சம் அதிகமாக தான் இருக்கின்றன. இருந்தாலும் இந்தப் படத்தோட மேக்கிங் ஸ்டைலுக்கு இதுதான் சரி எனக் கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

 Blue Sattai Maran: Vishal and SJ Suryah starring Mark Antony film Blue Sattai Maran Review

அதேநேரம் விஷாலும் எஸ்ஜே சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதால், படம் முழுக்க அவர்களே வந்து போவதாகவும், விஷால் கூட கொஞ்சம் வேண்டா வெறுப்பாக நடித்தது போல தெரியும். ஆனால், க்ளைமேக்ஸில் அதனை சரி செய்ய நினைத்துள்ளார். ஜிவி பிரகாஷ் சொந்தமாக இசையமைக்காமல், பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்தே ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். கேமரா, எடிட்டிங் ஒர்க்கும் மார்க் ஆண்டனி படத்துக்கு ப்ளஸ் என்றுள்ளார்.

மொத்தமாக இந்தப் படம் மனதுக்கு நெருக்கமாக இருக்குமா என்றால் அது கிடையாது. இதுவொரு சயின்ஸ் பிக்‌ஷன் படமா கிடையாது, இதுவொரு ஆக்‌ஷன் படமா கிடையாது, இதுவொரு காமெடி படமா கிடையாது. ஆனால், மார்க் ஆண்டனி நல்ல பொழுதுப்போக்கு திரைப்படம். எந்த லாஜிக்கும் பார்க்காமல், தனது மூளையை கழட்டி பாக்கெட்டில் வைத்துவிட்டு படம் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் மார்க் ஆண்டனி படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X