நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!

சென்னை: ரோமியோ போன்ற தமிழ் சினிமாவில் வெளியாகும் பல நல்ல படங்களை விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் ப்ளூ சட்டை மாறன் கொல்வதாக குற்றம்சாட்டியுள்ளார் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி "நாக்க மூக்கா", "என் உச்சி மண்டையில", "ஆத்திச்சூடி" என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி. நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Blue Sattai Maran vs Vijay Antony fight started over Romeo negative review

நான், சலீம், பிச்சைக்காரன் என வரிசையாக தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி சமீப காலமாக சொதப்பலான படங்களை கொடுத்து வருகிறார் என அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன.

ரோமியோவுக்கு நெகட்டிவ் விமர்சனம்: ரோமியோ படத்தின் விமர்சனத்தை தாண்டி விஜய் ஆண்டனி இந்த படத்தில் எடிட்டிங் செய்து படத்தை கெடுத்து விட்டார். இது அவருக்கு வேண்டாத வேலை என டைரக்ட் அட்டாக்கே ப்ளூ சட்டை மாறன் செய்திருந்தார். ஆனால், அப்போது விஜய் ஆண்டனி அமைதியாக இருந்த நிலையில், சமீபத்தில், டியர் மற்றும் ரோமியோ வசூல் நிலைமை இதுதான் என நட்புக்காக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சரத்குமார் மற்றும் விஜயகுமார் செத்துக் கிடக்கும் ஸ்டில்லை வெளியிட்டு மீமாக போட்டிருந்தார்.

Blue Sattai Maran vs Vijay Antony fight started over Romeo negative review

அன்பே சிவம் ஆக்கிடாதீங்க: சுந்தர். சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர், உமா ரியாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படம் ஆளவந்தான், ஹேராம், உத்தம வில்லன் படங்கள் போல ஃபிளாப் ஆனது. ஆனால், அதன் பின்னர் அந்த படங்களை கல்ட் கிளாசிக் திரைப்படங்கள் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதே போல ரோமியோ படத்தையும் ஃபிளாப் ஆக்கிடாதீங்க என விஜய் ஆண்டனி ட்வீட் போட்டுள்ளார்.

நல்ல படங்களை கொல்றாரு: "பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றது எல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவுஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.. என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்கள் புரியும்.. ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.." என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Blue Sattai Maran vs Vijay Antony fight started over Romeo negative review

ப்ளூ சட்டை மாறன் பதில்: விஜய் ஆண்டனியின் இந்த ட்வீட்டை பார்த்த ப்ளூ சட்டை மாறன் "அந்த கடைசி லைன்" என அன்பே சிவம் படத்தோட ரோமியோ படத்தை கம்பேர் பண்றாரே விஜய் ஆண்டனி என மீண்டும் கலாய்த்துள்ளார். பயில்வான் ரங்கநாதனுக்கு விஷால் கொடுத்த ட்ரீட்மெண்ட் போலத்தான் ப்ளூ சட்டை மாறனுக்கு விஜய் ஆண்டனி கொடுக்கணும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நல்ல படங்களை எடுத்தால் அவர் ஏன் இப்படி மோசமா விமர்சிக்கப் போகிறார் என ப்ளூ சட்டை மாறனுக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த வாரம் ப்ளூ சட்டை மாறன் vs விஜய் ஆண்டனி சண்டை நடக்கும் போல என நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Blue Sattai Maran vs Vijay Antony fight started over Romeo negative review

நவீன நடிகர் திலகம்: ரோமியோ படம்... அன்பே சிவம் போல இருக்கும் - நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி. அய்யா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையா என மீண்டும் விஜய் ஆண்டனியை வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X