Blue Sattai Maran: “அடுத்து உயிர்ச் சேதம் தான்..” விஜய்க்கு வார்னிங் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.
இந்த ட்ரெய்லர் சென்னையில் உள்ள பிரபலமான ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது.
அப்போது விஜய் ரசிகர்கள் நடந்துகொண்ட விதத்தால், ரோகிணி தியேட்டர் முழுவதும் சேதம் அடைந்தது.
இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், அடுத்து உயிர்ச் சேதம் தான் என விஜய்யை பகிரங்கமாக எச்சரித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
விஜய்க்கு வார்னிங் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்
விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டரைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளது. மேலும் இந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.

விஜய்யின் ஆக்ஷன் ட்ரீட்டுடன் வெளியான இந்த ட்ரெய்லர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், இந்த ட்ரெய்லரில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், வசனங்களில் கெட்ட வார்த்தைகள் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இப்படியெல்லாம் நடித்தால் அது இளைஞர்களையும் அவரது ரசிகர்களையும் பாதிக்கும் என பலரும் குற்றம் சாட்டினர்.
அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று ரோகிணி திரையரங்கில் நடந்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. விஜய் ரசிகர்களுக்காக லியோ ட்ரெய்லர் ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் தியேட்டர் சீட்டுகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். லியோ ட்ரெய்லருக்கே இப்படியென்றால், படம் வெளியாகும் போது நிலைமை என்ன ஆகுமோ என திரையரங்க உரிமையாளர்களை அச்சப்பட வைத்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், விஜய், ரோகிணி திரையரங்க நிர்வாகம், ரசிகர்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, "படத்தை படமா பாப்போம். அதுல கஞ்சா அடிச்சா நாங்களும் கஞ்சா அடிக்க மாட்டோம். அதுல கொலை பண்ணா நாங்ளும் பண்ண மாட்டோம்' - 90s and 2K Boomers" என கலாய்த்துள்ளார்.
மேலும், "ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத.. உங்களோட இந்த ஒழுக்க கேடை, சினிமா வெறியை, எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்கற காமடியை.. பாத்து மொத்த தமிழர்களும், இதர மாநில மக்களும் சிரிப்பா சிரிக்கறாங்க. இதுல ரெண்டரை மணிநேர படம் பாத்துட்டு.. கெட்டுப்போகாம.. ஒழுங்கா இருப்பாங்களாம். செம காமடிடா!! இப்படி பெரிய பொருட்சேதம் உண்டாக்குற அளவுக்கு சினிமா பைத்தியம் முத்திப்போன உங்களுக்கு.. வீட்லயும், ஸ்கூல், காலேஜ், வேலை செய்ற எடத்துல.. ஒருத்தரும் புத்தி சொல்ல மாட்டாங்களா? எல்லாரும் சொல்லியும் மண்டைல ஏறலையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னொரு டிவிட்டர் பதிவில், ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் கண்டனத்துக்குரியது என விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கக் கூடாது என்றுள்ளார். மேலும், "இப்போது பொருட்சேதம் மட்டுமே. அடுத்து படுகாயம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டால் அதற்கு இந்த தியேட்டர் முதலாளி மற்றும் நிர்வாகமே பொறுப்பு" எனக் கூறியுள்ளார்.
"இதற்கு முன்பு துணிவு FDFS நள்ளிரவு காட்சியில் இளைஞர் ஒருவர் இதே திரையரங்க பகுதியில், லாரி மீது டான்ஸ் ஆடி விழுந்து இறந்து போனார். இதே ரோகிணி தியேட்டர் வாசலில்.. வலிமை படத்தின் FDFS நள்ளிரவு காட்சியில், ஓடும் வண்டியில் பால் பாக்கெட்டை திருடினார்கள் இந்த 90s, 2K பூமர்கள். நரிக்குறவ சமுதாய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்ததும் இந்த தியேட்டர் ஊழியர்கள் தான்."
"FDFS காட்சிக்கான டிக்கட்களை ஆன்லைனில் விற்காமல்.. கவுண்ட்டரில் விற்பதால் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்படுத்துவதையும் இத்தோடு இந்த தியேட்டர் நிறுத்த வேண்டும். 'படத்துல கெட்டவார்த்தை பேசி, போதை மருந்து சீன்களை வச்சா.. அதை பாத்து நாங்களும் கெட்டுப்போவமா? போடா.. பூமர் ப்ளூ சட்டை' என்று இரண்டு நாட்களாக சவுண்ட் விட்ட புள்ளீங்கோ & பீட்டர்ஸ். இதாடா உங்க நாகரீகம்? படம் பாக்கறதுக்கு முன்னயே இப்படி ஒழுக்கம் கெட்டு இருக்கீங்க? இந்த லட்சணத்துல.. படத்தை படமா மட்டும் பாத்து நொட்டுவீங்களாம்."
"திருட்டு, உயிர்பலி, பொதுமக்களுக்கு தொந்தரவு, வாகன நெரிசல் என பல தவறுகளுக்கு காரணமாக உள்ளதால்.. இப்படியான நள்ளிரவு, அதிகாலை காட்சி, ட்ரைலர் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்வுகளுக்கு.. எந்த தியேட்டருக்கும் அரசாங்கம் இனி அனுமதி தரக்கூடாது. குறிப்பாக கோயம்பேடு ரோகிணி தியேட்டர் நிர்வாகத்திற்கு இறுதி எச்சரிக்கை விட வேண்டும்" பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











