பொன்னியின் செல்வன்..ஆஹா ஓஹோனு புகழ்ந்து கடைசியில் வாரிவிட்ட ப்ளூ சட்டை மாறன்..விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தை ஆஹா ஓஹோனு புகழ்ந்து கடைசியில் வாரிவிட்ட ப்ளூ சட்டை மாறனை இணையத்தில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது.

இந்த படத்தை பார்க்க இதுவரை பல ஆண்டுகளாக தியேட்டருக்கு வராதவர்கள் கூட வந்து கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மேளதாள கொண்டாட்டத்துடன் நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தி பதிப்பில் மட்டும் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜை விடுமுறை வர உள்ளதால் படம் 100 கோடிக்கு மேல் வசூலை தாண்டும் என்று நம்பப்படுகிறது.

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பேசி இருந்தார். அதில், பொன்னியின் செல்வன் படம் அமரர் கல்கியின் கதை என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படத்தை பலரும் எடுக்க முயற்சி செய்து அது முடியாமல் போய், தற்போது மணிரத்தினம் அதை நிறைவேற்றி இருக்கிறார்.

கதாபாத்திர தேர்வு முக்கியமானது

கதாபாத்திர தேர்வு முக்கியமானது

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காதவர்களுக்கு படம் பிடிக்கும், புத்தகத்தை படித்தவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். படத்திற்காக கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த படம் இந்த அளவுக்கு வெற்றி பெறக்காரணம் படத்தின் கதாபாத்திரத் தேர்வு மிகவும் வலுவானதாக இருக்கிறது.

வசனம் சூப்பர்

வசனம் சூப்பர்

அதுமட்டும் இல்லாமல் படத்தின் வசனம் ஒவ்வொன்றும் நெற்றி பொட்டில் அடித்தது போல ரொம்ப அற்புதமாக இருந்தது. அது போல தோட்டா தரணியின் குழுவினர் கோட்டைகள், கோவில்கள், அரண்மணைகள் உள்ளிட்டவை அனைத்தும் சூப்பர். கதை நடக்கும் அந்த காலகட்டத்திற்கே சென்ற மாதிரி இருந்தது. இது சரித்திரப்படம் என்பதால் இதில் வரும் போர் காட்சிகளும் சூப்பர் என்றார்.

முட்டு பாய்ஸ்

முட்டு பாய்ஸ்

தொடர்ந்து படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்த ப்ளு சட்டை மாறன், இந்த விமர்சனம் நல்லா இருந்துதா.. இது எல்லாருக்குமான விமர்சனம் இல்லை சில முட்டு பாய்ஸ்க்கான விமர்னம் என்று கூறிவிட்டு பின்னர் வழக்கம் போல தனது பாணியில் பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்தார். பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிக்க காரணம் என்னென்னா அடுத்து வர உள்ள இரண்டாம் பாகத்தையாவது நல்லா எடுக்கணும்.. இல்ல இரண்டாவது பாகத்தை எடுக்காமலாவது இருப்பார்கள் என்றார்.

விளாசிய நெட்டிசன்ஸ்

விளாசிய நெட்டிசன்ஸ்

ப்ளு சட்ட மாறனின் விமர்சனத்தை கேட்டு கடுப்பான நெட்டிசன்ஸ், இவனை புடிச்சி ஜெயிலில் போடவேண்டும் என்றும், பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தீர்களா என்றும் ரசிகர்கள் மாறி மாறி அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X