LED Tv மாதிரி இருக்கு தியேட்டர்..பிரபல திரையரங்கை மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை : இந்த தியேட்டரில் படம் பார்ப்பதற்கு LED Tvல படம் பார்க்கலாம் என்று பிரபல திரையரங்கை ப்ளூ சட்டை மாறன் படு மோசமாக விமர்சித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் என்ற பெயரை கேட்டதுமே நம்ம கோலிவுட் வட்டாரத்தில் இருப்பவர்கள் டென்ஷன் ஆகிவிடுவார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரத்தின் படம் என்றாலும் சரி, அறிமுக ஹீரோவாக இருந்தாலும் சரி விமர்சனம் என்ற பெயரில் சும்மா வெச்சி செய்துவிடுவார்.

இவர் பேசுவதை பார்க்கும் போது ரொம்ப அமைதியாக இருக்குற மாதிரித்தான் தெரியும் ஆனால், இவர் பேசுவதை காது கொடுத்து கேட்டால், காதில் ரத்தம் வராத குறையாக கிழித்து தொங்கவிட்டுவிடுவார். இப்படி பேசியே பாப்புலர் ஆனவர் தான் ப்ளூ சட்டை மாறன்.

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

ஒரு படத்தை விமர்சனம் செய்வது ஈஸி, படத்தை எடுத்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் அவதாரம் எடுத்து ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியானது. ஆன்டி இண்டியன் படத்தை இயக்குநர் பாரதிராஜாவே பாராட்டினார். ஆனால், படம் வரவேற்பை பெறவில்லை.

மறைமுகமாக தாக்கினார்

மறைமுகமாக தாக்கினார்

அதன்பின் தனது விமர்சகர் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் ப்ளு சட்டை மாறன்.சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாக வெந்து தணிந்தது காடு வெற்றி கொண்டாட்டத்தில் பேசி, இந்த படத்தை பார்த்து யாரும் என்னை இனி உருவகேலி செய்ய முடியாது என்றார். ப்ளு சட்டை மாறனை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.

விமர்சன மன்னன்

விமர்சன மன்னன்

இதையடுத்து, சும்மா இருந்த காலுக்கு சலங்கை கட்டிவிட்டது போல, சிம்புவை போட்டுத் தாக்கத்தொடங்கி விட்டார். குட்டி பிசாஸே என சிம்பு நடித்த படங்களின் பாடல்களில் பெண்களை ஆபாசமாக வர்ணிக்கும் வார்த்தைகளை எடுத்து போட்டு இதெல்லாம் உருவ கேலியில் வராத சிம்பு என சண்டை ட்விட்டரில் சட்டை போட்டார். அடுத்து கௌதம் மேனனை விமர்சனம் செய்தார். இரவின் நிழல் படம் வெளியான போது பார்த்திபனை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.

தியேட்டரா இது?

தியேட்டரா இது?

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை கோயம்பேட்டில் மிகவும் பிரபலமான ரோகினி தியேட்டரை படுமோசமாக விமர்சித்துள்ளார். அதில் இது திரைப்படத் திரையா? அல்லது எல்இடி டிவியா? என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். இத்தனை திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளு சட்டை மாறன் தற்போது தியேட்டரையும் விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X