Blue Sattai Maran - விருது வழங்கிய விஜய்.. அஜித் ரசிகர்களுடன் சண்டையை தூண்டிவிடும் ப்ளூ சட்டை மாறன்?

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) நேற்று முன் தினம் மாணவ, மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கிய சூழலில் ப்ளூ சட்டை மாறன் அஜித் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு ட்வீட் செய்திருக்கிறார்.

விஜய் கல்வி விருது வழங்கும் விழா என்ற பெயரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த முதல் மூன்று பேரை சந்திக்க முடிவு செய்திருந்தார் விஜய். அதன்படி கடந்த 17ஆம் தேதி 234 தொகுதிகளிலிருந்தும் மாணவ, மாணவிகளை வரவழைத்து நீலாங்கரையில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்து சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் வழங்கி சால்வை அணிவித்தார். கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கும் அதிகமாக இந்த விழா நடைபெற்றது.

 Blue Sattai Maran will provoke a fight with Vijay and Ajith fans

வரவேற்பு: மாணவ, மாணவிகளின் கல்வி விஷயத்தில் விஜய்யின் இந்த செயல்பாடு ஆரோக்கியமான ஒன்று பலரும் பாராட்டினர். மேலும் நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு வெகுவாக ரசிக்கப்பட்டது. ரொம்பவே கேஷுவலாக அதிக அறிவுரை இல்லாமல் ஒரு ஃப்ரெண்ட்லி அப்ரோச்சோடு அவர் பேசியது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் ரசிக்க வைத்தது. வீட்டில் இருந்தபடி விஜய்யின் பேச்சை வீடியோவில் பார்த்தவர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டை தெரிவித்தனர்.

சர்ச்சை: இந்த நிகழ்ச்சி எவ்வளவு வரவேற்பைப் பெற்றதோ அதே அளவு விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. முதல் விமர்சனமாக விஜய் இந்த நிகழ்ச்சியை தன்னுடைய அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறார் என்று கூறினர். அதுமட்டுமின்றி அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை அழைத்து வந்ததில் குளறுபடி நடந்துவிட்டது என்றும் கூறினர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக மாணவி ஒருவர் தான் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறேன். ஆனால் என்னை யாரும் அழைக்கவில்லை என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசும் வீடியோ ஒன்றும் வெளியானது.

சாதி சான்றிதழ்?: இந்த பிரச்னைகளை தவிர்த்து முக்கிய பிரச்னையாக இன்னொன்று பேசப்பட்டது. அதாவது விருதை பெற்றுக்கொண்ட மாணவர் ஒருவர் தன்னுடைய மார்க் ஷீட், சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் கேட்டதாக செய்தியாளரிடம் பேசுவதுபோன்ற ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வீடியோ போலியானது. அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் கூறினர்.

ப்ளூ சட்டை மாறன்: ஒருபக்கம் இப்படிப்பட்ட சர்ச்சைகள் எழுந்த சூழலில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறனோ தனது ட்விட்டர் பக்கத்தில் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க - கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை. 'கட் அவுட், ப்ளக்ஸ் பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்ட்டர் ரேட்ல மட்டும் டிக்கட் வாங்குங்க... இத எப்ப சொல்லபோறீங்க.. கமாண்டர்' போன்ற பல ட்வீட்டுகளை பதிவு செய்துகொண்டே இருந்தார். அவரது ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடியும் கொடுத்துவந்தனர்.

 Blue Sattai Maran will provoke a fight with Vijay and Ajith fans

புதிய ட்வீட்: இந்நிலையில் விஜய் இப்போது மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும், சான்றிதழையும் வழங்கியதுபோல் அஜித் 20 வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டார் என்ற கேப்ஷனுடன் அஜித் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உங்களுக்கு ஏன் கடைசி இரண்டு நாட்களாக விஜய்யை கண்டாலே எரிச்சல் வருகிறது. இப்போது சம்பந்தமே இல்லாமல் ஏன் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பிவருகின்றனர்.

அதுமட்டுமின்றி அவர் இவ்வாறு செய்வதன் மூலம் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் சண்டையை தூண்டிவிட பார்க்கிறார். இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம் எனவும் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X