Rajinikanth: வரம்பு மீறிய ப்ளூ சட்டை மாறன்.. ரஜினிகாந்த் கெரியரின் கடைசியில இருக்காரா? இது தவறு இல்லையா?
சென்னை: இயக்குநர் மற்றும் விமர்சகரான ப்ளூ சட்டை மாறனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் அவ்வப்போது கேட்டு வருகிறார்கள். காரணம் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மற்ற நடிகர்களை விமர்சிப்பது போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமர்சித்தால் கடந்து விடுவார்கள். ஆனால் அவர் ரஜினிகாந்தை அளவுக்கு மீறி விமர்சிக்கிறார் என்றுதான் அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதாவது ஜூன் 1ஆம் தேதி அவரது எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, விஜய் மற்றும் கமல்ஹாசனின் திரை மற்றும் அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு விமர்சித்ததில் சில வார்த்தைகள் விமர்சனத் தன்மைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. அதாவது அவரது பதிவில், " நம்ம படங்களை விட விஜய் பயலோட படங்கள் தான் பல வருசமா அதிக பிசினஸ் ஆகுது. போதாக்குறைக்கு அரசியலுக்கும் வந்துட்டான். பழைய எதிரி கமல் பல வருசமா நமக்கு பின்னால.. நம்பர் 2 இடத்துலதான் இருந்தான். திடீர்னு விக்ரம், அமரன் படங்கள் பெரிய ஹிட்டாகி... தயாரிப்பாளரா செமத்தியா லாபம் பாக்க ஆரம்பிச்சிட்டான்.
நாம என்னடான்னா.. சன் பிக்சர்ஸ் & லைகா கிட்ட மாத்தி மாத்தி சம்பளம் வாங்கற அளவுலதான் இருக்கோம். தக் லைஃப் படத்துக்கு ஊர் ஊரா பறந்து பறந்து ப்ரமோஷன் பண்றான். இதெல்லாம் நம்மால முடியாது. பேசாம கூலி ப்ரமோஷனுக்கு என் டூப்பை எல்லா ஊருக்கும் அனுப்பலாமா? கோயம்புத்தூர் ML A தேர்தல்ல இந்தாளு தோத்தப்ப சந்தோசமா இருந்தது. ஆனா இப்ப தேர்தலையே சந்திக்காம நேக்கா ராஜ்யசபா எம்.பி ஆகிட்டான். தக் லைஃப் படமும் ஹிட்டானா.. இவனை கைலயே புடிக்க முடியாதே!!! குசேலன் டைம்ல நான் கர்நாடகா கிட்ட மன்னிப்பு கேட்டேன். ஆனா இந்தாளு மன்னிப்பு கேக்காம கெத்தா இருக்கான்.

கெரியர்: நாம வலதுசாரியா இருந்தா.. இவன் வீம்புக்குன்னே இடதுசாரியா இருக்கான். நம்ம கெரியரோட கடைசி ரவுண்ட்ல இந்த விஜய்யும், கமலும் நம்மளை நாக் அவுட் பண்ணிடுவானுங்க போலருக்கே... என்ன செய்யலாம்...?" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இவரது பதிவுக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ரிப்ளை செய்து வருகிறார்கள்.
50 ஆண்டுகள்: இவரது இந்த பதிவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது பலருக்கும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார். இதற்கு முன்னர் இது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார், அவ்வளவுதான் இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படம், அவ்வளவுதான் இனிமேல் ரஜினிகாந்த்தால் நடிக்கவே முடியாது என்று விமர்சிக்கப்பட்ட காலத்தில் மாஸ் கம்பேக் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார்.

வரம்பு மீறி: அதே நேரத்தில் தனது கெரியரின் கடைசி கட்டத்தில் உள்ளாரா இல்லையா என்பதை அவரே முடிவு செய்வார். ஆனால் விமர்சிக்கிறேன் என வரம்பு மீறி பேசுவது என்பது ஆரோக்கியமானதாக இல்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் இவரது பதிவில் ரஜினிகாந்த் யோசிக்கிறார் என்ற பார்வையில் விஜய் மற்றும் கமல்ஹாசனை ஒருமையில் குறிப்பிட்டுள்ளதும் அவர்களது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











