பயில்வான் ரங்கநாதனை சினிமா நிகழ்ச்சிகளில் அனுமதிக்கக்கூடாது... கடிதம் எழுதிய டைரக்டர்!

சென்னை : முந்தானை முடிச்சு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பயில்வான் ரங்கநாதன்.

பத்திரிகையாளராகவும் உள்ள பயில்வான் ரங்கநாதன், யூடியூப் மூலம் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரது இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன்

நடிகர் பயில்வான் ரங்கநாதன்

நடிகர் பயில்வான் ரங்கநாதன் முந்தானை முடிச்சு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவந்த இவர், இறுதியாக சாமி 2 படத்தில் நடித்துள்ளார். சினிமா படங்கள் குறித்து விமர்சனங்களையும் இவர் எழுதி வருகிறார்.

யூடியூபில் வீடியோக்கள்

யூடியூபில் வீடியோக்கள்

இவருடைய கட்டுமஸ்தான உடலை பார்த்து எம்ஜிஆர் இவரை பயில்வான் என்று அழைக்க அதுவே இவரது அடைமொழியாக மாறி போனது. தனது இளம்வயதில் மிஸ்டர் சென்னை பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது யூடியூப் பக்கத்தில் நடிகர், நடிகைகளின் அந்தரங்கம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

திரைத்துறையினர் கண்டனம்

திரைத்துறையினர் கண்டனம்

இவரது இந்த முயற்சிக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சுகாசினி, ஓவியா உள்ளிட்ட நடிகைகளிடம் இவர் கண்டனங்களை பெற்றுள்ளார். இதுவும் ஒருவகையில் Non Sexual Harassment தான் என்று நடிகை ஓவியா பயில்வான் ரங்கநாதனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

முகம்சுளிக்கும் வீடியோக்கள்

முகம்சுளிக்கும் வீடியோக்கள்

இவர் வெளியிடும் வீடியோக்களில் சில வீடியோக்கள் முகத்தை சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதையடுத்து பலரது கடுப்பை வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார் பயில்வான் ரங்கநாதன். காலம் போன கடைசியில் இவரது புத்தி இப்படி போகிறதே என்று சிலர் நேரடியாகவும் விமர்சித்து வருகின்றனர்.

நடிகைகள் சினிமாவை விட்டு ஓட காரணம்

நடிகைகள் சினிமாவை விட்டு ஓட காரணம்

குறிப்பாக பிரபல நடிகைகள் சினிமாவை விட்டு ஓட காரணம் இதுதான் என்று பயில்வான் வெளியிட்ட வீடியோவிற்கு அதிக அளவிலான கண்டனங்கள் எழுந்தன. இந்த வீடியோவில் ஓவியா, அபிராமி, சுனைனா, சோனியா அகர்வால் உள்ளிட்டவர்கள் குறித்து இவர் பேசியிருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் கோபம்

ப்ளூ சட்டை மாறன் கோபம்

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதனின் இத்தகைய வீடியோக்களால் ப்ளூ சட்டை மாறன் மிகுந்த கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை சினிமா நிகழ்ச்சிகளில் அனுமதிக்கக்கூடாது என்றும் ப்ளூ சட்டை மாறன் சினிமா சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆன்டி இந்தியன் பிரஸ் மீட்டிலும் பயில்வான் ரங்கநாதனை இவர் சாடியுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

பயில்வான் ரங்கநாதனின் இத்தகைய வீடியோக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தாலும், ரசிகர்களின் அதிகமான பார்வைகளை பெற்று வருகிறது. எப்போதுமே நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இதனாலேயே பயில்வான் ரங்கநாதனின் வீடியோக்கள் வரவேற்பு பெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X