விஜய்க்கு வாக்களிக்க தயாராகும் அஜித் ரசிகர்கள்? ப்ளூ சட்டை மாறன் எடுத்த கருத்துக் கணிப்பு ரிசல்ட்!

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடத் தயாராகிவிட்டார். இப்படியான நிலையில் இவருக்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு செல்வாக்கு கிடைக்கும் என்ற கேள்வி பலரது மத்தியில் இப்போதும் உள்ளது. அவரது ரசிகர்களே அவருக்கு வாக்கு செலுத்துவார்களா என்ற கேள்வி இருந்து வந்தாலும், ரசிகர்களைக் கடந்து மக்களின் வாக்குகளைப் பெறவும் விஜய் முயற்சி செய்து வருகின்றார். இப்படியான நிலையில், 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், அஜித் ரசிகர்கள் யாருக்கு வாக்கு அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படியான நிலையில், இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளார். அது குறித்துக் காணலாம்.

நடிகர் விஜய், திரைத்துறையில் இருந்து கொண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்து ஒரு ஆண்டு ஆகவுள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசியல் களத்தில் விஜய் குறித்த பேச்சுகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் வேண்டாம் விளம்பரம் வேண்டாம், படத்தில் நடிக்கின்றேன்.. சம்பளம் வாங்குகின்றேன்.. எனது குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கின்றேன்.. என இருப்பவர் அஜித்குமார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே அஜித்தை நேரடியாக அரசியலுக்கு அழைத்தும் வராதவர் அஜித். அப்படி இருக்கும்போது, அஜித் குறித்த பேச்சுகள் அரசியல் தளத்தில் அதிகரித்துள்ளது. '

blue sattai maran ajithkumar vijay tvk

அதாவது 2026ஆம் ஆண்டு தோர்தல் களத்தில் வெற்றியைத் தீர்மானிப்பதில் அஜித் ரசிகர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்ற பேச்சு இப்போதே எழுந்துவிட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் கால அவகாசம் இருந்தாலும், அஜித் ரசிகர்களைக் கவர பல்வேறு கட்சியினர் பல விஷயங்களைச் செய்து வருகின்றனர் என்ற பேச்சு, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அடிபடுகின்றது.

அரசியல்: குறிப்பாக தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக, அஜித்தின் கார் ரேஸ் பங்கேற்புகளை தொடர்ந்து பாராட்டி வருகின்றது. ஆனால் கடந்த காலத்தில் அஜித்துக்கும் திமுகவிற்குமான மனக்கசப்புகளை அஜித் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை எனக் கூறுகின்றனர். மேலும் அஜித்தினை அரசியலுக்கு அழைத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை என்பதால், அதிமுக மீதும் அஜித்துக்கு முன்பு இருந்த மரியாதை இருக்குமா என்ற கேள்வி உலா வருகின்றது.

blue sattai maran ajithkumar vijay tvk

அஜித்: இதுமட்டும் இல்லாமல், நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அஜித் ரசிகர்களின் வாக்கினைக் கவர்வதற்காவே இவ்வாறு மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகின்றது. மேலும் விஜய் மீதான, அஜித் ரசிகர்களின் வெறுப்பு பாஜகவுக்கு ஓட்டாக மாறும் என பாஜக கணக்கு போடுவதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அஜித் ரசிகர்களின் வாக்கு யாருக்கு போகும் என்ற கேள்வியை முன் வைத்து எக்ஸ் பக்கத்தில், கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

blue sattai maran ajithkumar vijay tvk

தவெக: அதில் விஜய்யின் தவெகவிற்கு 67 சதவீத பேரும், திமுகவிற்கு 21 சதவீத பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 6 சதவீத பேரும், பாஜகவுகு 6 சதவீத பேரும் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான தகவலை ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் இந்த எக்ஸ் பக்க கருத்துக் கணிப்பில் விஜய்யின் தவெகவிற்கு வாக்கு செலுத்தியவர்கள் விஜய் ரசிகர்களாகக் கூட இருக்கலாம் இல்லையா என்ற கேள்வியும், ஏன் கட்சிகளின் பட்டியலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இல்லை என்ற கேள்வியையும் இணையவாசிகள் முன் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X