Kanguva: கங்குவாவிற்காக சன்டே கூட ரெஸ்ட் தராமல் வேலை வாங்கும் ஜோதிகா.. கண்டிக்கும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சூர்யா - தீஷா பதானி, நட்டி, போஸ் வெங்கர், பாபி தியோல், கார்த்தி, கருணாஸ், கோவை சரளா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் கங்குவா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா விமர்சகர்களின் விமர்சனங்கள் குறித்தும் படம் குறித்தும் தனது கருத்தினை இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜோதிகாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா ஹிட் படமாக மாறும் என படக்குழு தரப்பில் தெரிவித்திருந்தனர். இந்தப் படம் சூர்யாவை உலக சினிமாவிற்கு அழைத்துச் செல்லும் எனவும், உலக சினிமா தரத்திற்கு இந்தப் படத்தினை உருவாக்கியுள்ளதாக கூறினர். படம் வெளியான பின்னர் படத்தின் இசை பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.

blue sattai maran jyotika suriya kanguva

நடிகையும் சூர்யாவின் மனைவியுமான நடிகை ஜோதிகா படம் குறித்தும் படத்தின் விமர்சனங்கள் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார். கங்குவா தொடர்ந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் ஜோதிகாவின் கருத்து பலரது கவனத்தினை ஈர்த்தது. அதாவது ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ சூர்யாவின் மனைவியாக இதனை எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும், நடிகை ஜோதிகாவாகவும் எழுதுகிறேன். நடிகராக இருப்பதற்காகவும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றவேண்டும் எனும் சூர்யாவின் கனவை பாராட்டுகின்றேன். கங்குவா படத்தின் முதல் 30 நிமிடங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். படத்தின் பின்னணி இசையும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதிதான். கங்குவா படத்தினையும் படக்குழுவைடும் பாராட்ட பல விஷயங்கள் உள்ளது.

நெகடிவ் விமர்சனம்: குறிப்பாக ஒளிப்பதிவாளர் வெற்றியின் கேமரா ஒர்க், 3டி தொழில்நுட்பம், படத்தின் இரண்டாம் பாதியில் பெண்கள் சண்டைக் காட்சிகள் என பாராட்ட பல உள்ளது. ஆனால் முதல் அரைமணி நேரத்தினை மட்டுமே கொண்டு முழுப் படத்தினையும் எடைபோடுவது என்பது ஏமாற்றம் அளிக்கின்றது. ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகடிவ் விமர்சனங்கள் உண்மையாலுமே எனக்கு ஆச்சரியத்தைய கொடுக்கின்றன. குறிப்பாக பெரிய பட்ஜெட் படங்களுக்கும், பெண்கள் பின்னால் கதாநாயகர்கள் சுற்றும் படங்களுக்கும், இரட்டை அர்த்த வசங்கள் பேசப்படும் படங்களுக்கு கூட இந்த அளவுக்கு நெகடிவ் விமர்சனங்கள் எப்போதும் கொடுக்கப்பட்டதில்லை” என பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

திட்டமிட்டு சதி: இது தொடர்பாக விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜோதிகாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அதாவது இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ ஒரு காட்டு மொக்கை படத்தை அனைவரும் கழுவி ஊற்றிவிட்டால்.. தோல்வியை ஒப்புக்கொண்டு.. அடுத்து உருப்படியான படங்களில் நடித்து.. அதே மக்களிடம் பாராட்டை பெறுவதுதான் அறிவு முதிர்ச்சி. அதை விட்டு. . அளவுக்கு அதிகமாய் ப்ரமோசனில் வாய் விடுவது, போலியான வசூலை சொல்வது, டுபாக்கூர் சக்சஸ் மீட் கொண்டாடுவது, படம்பிடிக்கவில்லை என்று சொல்பவர்களை எல்லாம் திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என சீறுவது..

வசூல் வடை: இப்படி அடுக்கடுக்காக தவறு செய்தால்.. அதற்கான பலனும் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். கங்குவை மறந்து.. நயன், கஸ்தூரி என வேறு டாபிக்குகளை நோக்கி நெட்டிசன்கள் போய் கொண்டிருக்கும்போது..,இன்று மீண்டும் அடுப்பை பற்ற வைத்திருக்கிறார் மேடம். இத்தோடு விட்டால் கூட பரவாயில்லை. என் வளர்ச்சி பிடிக்காமல் வன்மம் கக்கப்படுகிறது என படத்தின் ஹீரோ சென்டிமென்ட் ரசத்தை பிழியாமலும், தயாரிப்பாளர்.‌ வசூல் வடைகளை சுட்டு தள்ளாமலும் இருப்பதே நல்லது.

கண்டனம்: எவ்வளவு கொம்பு சுற்றினாலும்.. உலகளவில் விமர்சனம் மற்றும் வசூலில் இது ஒரு படுதோல்விப்படம் என்பதே உண்மை. மக்களுக்கு நீங்கள்தான் மீம் கன்டன்ட் தந்து கொண்டே இருக்கிறீர்கள்.சன்டே கூட ரெஸ்ட் தராமல் வேலை வாங்குவதற்கு.. படம்பார்க்கும் பாட்டாளிகள் சார்பாக கடும் கண்டனங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X