வணிக ரீதியாக எடுபடாத பராசக்தி? பொங்கல் வைத்து டபுள் குஷியில் பாஜக.. கொளுத்தி போடும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படமான அமரன் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வணிக ரீதியாக ஒர்க் அவுட் ஆகாமல் போனதற்கு காரணம் விஜய் ரசிகரளின் நெகடிவ் விமர்சனங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. படம் கடந்த 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை திரைக்கதையாக அமைத்து உருவாக்கப்பட்டது. இப்படி இருக்கையில் படத்திற்கு ரௌடி கதை என்று விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமீபத்திய பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவை சேர்ந்த சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " அமரன் படத்தை அதிகம் கொண்டாடியது பாஜகவினர்.

Blue Sattai Maran X Page Post About Parasakthi Team Attend BJP Minister L Murugan Pongal Celebrations

* பராசக்தி படம் ஹிந்தி திணிப்புக்கு எதிரானது என்றாலும்.. தியேட்டருக்கு வந்துவிட்டது. ஜனநாயகன் இன்னும் கோர்ட்டில் இருக்கிறது.

* பராசக்தி படம் அப்போதைய காங்கிரஸ் அரசை தவறாக சித்தரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

* இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நடத்திய மோடி தலைமையிலான பொங்கல் விழாவில் ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ், திடீர் தளபதி ஆகிய பராசக்தி டீமுக்கு சிறப்பு அழைப்பு தரப்பட.. அவர்களும் கலந்து கொண்டனர்.

* நியாயப்படி.. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மோடியின் பொங்கல் விழாவில் பங்கேற்ற பராசக்தி டீமுக்கு எதிராக பேச வேண்டியவர்கள்... அமைதி காக்கிறார்கள்.

* பராசக்தி படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கோவத்தை ஏற்படுத்தி இருப்பதும், திமுகவினர் மற்றும் அதன் அனுதாபிகளின் ஆதரவை பெற்ற அப்படம் வசூல் ரீதியாக தேறாமல் போனதாலும்.. டபுள் குஷியில் பாஜக இருப்பதாக தெரிகிறது.

* அதனால்தான் எத்தனையோ நடிகர்கள் இங்கு இருந்தாலும்.. பராசக்தி டீமை சிறப்பித்து அழைத்துள்ளதா பாஜக?" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் மனுஷன் உள்குத்துடன் கொளுத்திப் போடுறாரே என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X