Vijay: அரசியலில் உஷாரா இருங்க விஜய்.. எச்சரிக்கும் ப்ளூ சட்டை மாறன்.. இதுதான் விஷயமா?

சென்னை: விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சினிமா தொடர்பான தகவல்களை மட்டும் இல்லாமல், அரசியல், சமூகம் சார்ந்த பலதரப்பட்ட செய்திகளையும் பகிர்ந்து வருபவர். அதேநேரத்தில் பல நிகழ்வுகள் குறித்து, தனது கருத்தினையும் தெரிவித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்க பதிவின் மூலம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, நடிகர் விஜய் கடந்த 6ஆம்தேதி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தினை வெளியிட்டார். புத்தகத்தை ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் என்ற நிறுவனமும் தொகுத்திருந்தது. ஆதவ் அர்ஜுனா அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, துணைப் பொதுச்செயலாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய விஷயங்கள், அரசியல் தளத்தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கிவைக்கப்பட்டார்.

blue sattai maran tvk vijay

ஆதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டபோதே, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில், ”சஸ்பண்ட் செய்திருப்பதால்.. அவர் கோவப்பட்டு விரைவில் ராஜினாமா செய்வார். பிறகு த.வெ.க.வில் ஸ்லீப்பர் செல்லாக சேர்வார். ஜோலியை முடித்த பிறகு.‌. மீண்டும் பழைய இடத்திற்கு ரிடர்ன் ஆவார். விஜய் அவர்களே.. உஷாரய்யா உஷாரு. ஓரஞ்சாரம் உஷாரு” என பதிவிட்டிருந்தார்.

விஜய்: ஆனாலும் ஆதர் அர்ஜுனா தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியது பேசுபொருளாக மாறியது. இப்படியான நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது குறித்தும் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், “ இவரும் அவரை நிரந்தரமாக நீக்க மாட்டேங்குறாரு. அவரும் கட்சியை விட்டு விலகாம இருக்காரு. சஸ்பண்ட் எனும் சஸ்பன்ஸை வச்சி.. ஜவ்வு மிட்டாய் போல இழுக்குறாங்கப்பா” என பதிவிட்டிருந்தார்.

ஸ்லீப்பர் செல்: இப்படியான நிலையில், ஆதவ் அர்ஜுனா தான் முழுக்க முழுக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டார். இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, “ துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்களை வேட்டையாடிய விஜய் அவர்களே.. விரைவில் உங்கள் கட்சியை நோக்கி ஒரு ஸ்லீப்பர் செல் ஏஜன்ட் வரவுள்ளார். அடுத்த வருடம் மேலும் சிலர் வருவார்கள்.

உஷாரய்யா: உங்கள் அரசியல் வியூகங்கள் அனைத்தும் இவர்கள் மூலம் லீக் செய்யப்படும். தவறான ஆலோசனைகளை சொல்லியும் உங்களை திசை திருப்புவார்கள்‌. படத்தில் வருவது போல.. நிஜத்திலும் அலர்ட்டாக இருந்து...இவர்களை ஆரம்பத்திலேயே களை எடுத்தால் மட்டுமே.. ஆட்சியை பிடிக்க முடியும். தலீவர் கடைசி நேரத்தில் கட்சியை கலைத்து விட்டு அரசியலை விட்டு ஓடியது ஏன் தெரியுமா? கடைசி நேரத்தில் நடந்த சில மீட்டிங்கில்.. தனது கட்சியில் வேறு சில பெரிய கட்சிகளின் ஸ்லீப்பர் செல்கள் இருந்தார்கள் என்பதை உணர்ந்த பிறகுதான். ஆகவே..‌உஷாரய்யா... உஷாரு” என பதிவிட்டுள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X