Rajinikanth: களைகட்டும் விஜய் மாநாடு.. ரஜினி ரியாக்‌ஷன் என்ன? பிரபலம் சொல்றது உண்மையா?

சென்னை: கடந்த சில தினங்களாகவே இணையத்திற்குள் நுழைந்தாலே விஜய் ரசிகர்களின் ஆதிக்கம்தான் இருந்தது. விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று அதாவது அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநாடு, நிகழ்ச்சி நிரலின்படி, மதியம் 2 மணிக்கு மேல்தான் தொடங்குகின்றது. ஆனால் அதிகாலையில் இருந்தே தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள, மாநாட்டுத் திடலில் கூடி வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக பிரபலம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கும் விஜய்க்கு திரைத்துறையில் பனிப்போர் நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசியது விஜய்யைத்தான் என கூறப்பட்டது. இதற்கு விஜய் ரசிகர்கள் இணையத்தில் பதிலடி கொடுக்கின்றேன் என மிகவும் மோசமாக நடந்துகொண்டனர்.

blue sattai maran rajinikanth tvk maanadu

இதனால் ஜெயிலர் படத்தின் ரிலீஸின்போதும், லியோ படத்தின் ரிலீஸின்போதும், இருவரின் ரசிகர்களும் மாறிமாறி இணையத்தில் அடித்துக் கொண்டனர். அதேபோல், அண்மையில் வெளியான இருவரின் படங்களான கோட் மற்றும் வேட்டையன் படத்தின் ரிலீஸின் போதும் இந்த மோதல்போக்கு தொடர்ந்தது.

ரஜினி - அரசியல்: மேலும் ரஜினி அரசியலுக்கு வருகின்றேன் எனக் கூறிவிட்டு, பின்னர் வரவில்லை என பின் வாங்கினார். இப்படி இருக்கும்போது, விஜய் எதுவும் கூறாமல் தனது அரசியல் வருகையை அறிவித்து இன்றைக்கு கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தவுள்ளார். இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும். காரணம் ரஜினி அரசியலுக்கு வருகின்றேன் வருகின்றேன் எனக் கூறிவிட்டு ஏமாற்றிவிட்டார்.

blue sattai maran rajinikanth tvk maanadu

மாநாடு: ஆனால் விஜய் சினிமாவில் ரஜினிகாந்த்திற்கு போட்டியாக இருந்தது மட்டும் இல்லாமல், துணிந்து அரசியலுக்கும் வந்துவிட்டார். இப்படி இருக்கும்போது, விஜய்யின் நடவடிக்கைகள் பல ரஜினி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் கட்சியின் மாநில மாநாடு தொடர்பான செய்திகள் ரஜினிக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கும் என கூறியுள்ளார்.

எரிச்சலில் ரஜினி?: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், ”த.வெ.க.மாநாடு. லட்சக்கணக்கில் குவியும் தொண்டர்கள். மீடியா முழுக்க தொடர் கவரேஜ். தலீவர் நவ்” என குறிப்பிட்டு மீம் டெம்ப்ளேட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் பதிவின் கமெண்ட் செக்‌ஷனில் ரஜினியை வசைபாடி பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன் ஒரு வாக்கெடுப்பு நடத்தி வருகின்றார். அதில் ’நாளை த.வெ.க. மாநாடு துவங்கும் நேரத்தில் சன் டிவியில் ஜெயிலர் படம். நீங்கள் பார்க்க விரும்புவது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X