பராசக்தி படத்துக்கு சிவகார்த்திகேயன் ஓ.கே. சொல்லக் காரணம்.. SKவின் வேற லெவல் ஐடியா.. பிரபலம் பளீச்!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் பெயர் உள்ளது. இவரது அமரன் படம் வெற்றி, பராசக்தி படத்தின் கமிட்மெண்ட், ஏ.ஆர். முருகதாஸ் உடனான படத்தின் பெயர் மதராஸி என சிவகார்த்திகேயன் டாப் கியரில் முன்னேறிக் கொண்டு உள்ளார். மதராஸி மற்றும் பராசக்தி படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர், இவரது சம்பளம் ரூபாய் 100 கோடிகளைக் கடக்கும் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள காரணம் என்ன என்பது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பராசக்தி படம் சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க, சுதா கொங்கரா நடிக்கிறார். முதலில் இந்த படத்தில், நடிக்க ஒப்புக் கொண்டது நடிகர் சூர்யா தான். சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். சூர்யா கமிட் ஆன போது இந்த படத்திற்கு புறநானூறு என பெயர் சூட்டப்பட்டிருந்தது. மேலும் அந்தப் படத்தை சூர்யா தயாரிக்கவிருந்ததால், புறாநானூறு பெயரையும் அவரது தயாரிப்பு நிறுவனம், பதிவு செய்தது. இதனால் சிவகார்த்திகேயன் படத்தில் கமிட் ஆன பின்னர் படத்தின் பெயர் பராசக்தி என மாற்றப்பட்டது.

பராசக்தி என்ற டைட்டில், ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த பேச்சினை இயல்பாகவே ஏற்படுத்தியுள்ளது. மேலும் படப்பிடிப்பு தள காட்சிகள், புகைப்படங்கள், டைட்டில் டீசர் என அனைத்துமே, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள காரணம் குறித்து, ப்ளூ சட்டை மாறன் தனது எகஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பராசக்தி: இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், " சாட்டையை பிடிங்க.. திடீர் தளபதி.. துப்பாக்கியை பிடிங்க என விஜய் சொன்ன நல்ல நேரம். அமரன் ஹிட்டானது. மக்கள் ஆதரவை விட, பாஜக தலைவர்களின் ஆதரவை அமோகமாக பெற்ற படம் அது. இப்போது துப்பாக்கியை எதிர்பக்கம் திருப்பியுள்ளார் திடீர் தளபதி. பராசக்தி.. ஹிந்தி எதிர்ப்பு பற்றிய கதை என்கிறார்கள். அமரன் மூலம் தென்னை மரத்தில் ஒரு குத்து. பராசக்தி மூலம் பனைமரத்தில் ஒரு குத்து என நேக்காக வண்டி ஓட்ட ஆரம்பித்து விட்டார்.

சூர்யா: இதில் முதலில் நடிக்க வேண்டியது சூர்யா என்பது பலருக்கும் தெரியும். இக்கதையை ஓகே செய்த காலகட்டத்தில் அவரிடம் திமுக பாசமும், பாஜக எதிர்ப்பு நிலையும் இருந்தது. நீட் தேர்வு, புதிய தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து அறிக்கை விட்டதென உதாரணங்கள் உண்டு. ஆனால் மும்பையில் செட்டிலாகி, பான் இந்தியா ஹீரோவாக முயல ஆரம்பித்ததும் அரசியல் ரீதியான விமர்சனம் செய்வதை பெருமளவு தவிர்த்தார். திராவிட கொள்கைகளில் ஒன்றான ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு படத்தில் நடித்தால்.. பாஜகவினரின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும். அது.. தான் நடிக்கும் பான் இந்தியா பட வியாபாரம் மற்றும் வசூலை பாதிக்கும் என்பதை உணர்ந்து.. பராசக்தியில் இருந்து விலகினார்.

சிவகார்த்திகேயன்: மாஸ் ஹீரோவாக உயர.. சர்ச்சையான கதை அவசியம் என்பதால் இதில் நடிக்க உடனே ஓகே சொன்னார் திடீர் தளபதி. நடப்பதையெல்லாம் பார்த்தால்.. எதிர்காலத்தில்..தனது அரசியல் சாட்டையையும் திடீர் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் போல..பழைய இளைய தளபதி" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











