எனக்கு அரசியல் தெரியாது.. என்னை விட்ருங்கடா என புலம்பும் சூப்பர் ஸ்டார் - ப்ளூ சட்டை மாறன் கலாய்

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் கவனிக்கப்படும் சினிமா விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். சில நேரங்களில் சினிமாவுக்கு விமர்சனம் செய்வது மட்டும் இல்லாமல் சினிமா நட்சத்திரங்களில் தனிப்பட்ட வாழ்வில் மூக்கை நுழைத்து, சம்பந்தப்பட்டவர்களிடமோ அல்லது அவர்களது ரசிகர்களிடமோ வாங்கிக் கட்டிக் கொள்வார். அந்த வகையில் இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, பல்வேறு கருத்துக்களை தனது எக்ஸ் பக்கத்தில் நேரடியாக, பதிவிட்டு வருகின்றார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

blue sattai maran rajinikanth vijay tvk

இந்நிலையில் இன்று கூலி படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் ஒருசில கேள்விகள் அரசியல் தொடர்பானதாக இருந்தது. உடனே, அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என கோபத்துடன் பதில் அளித்தார் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

சூப்பர் ஸ்டார்: இந்தப் பேச்சினை மையமாக வைத்து, ப்ளூ சட்டை மாறன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை சினிமா வாழ்க்கை குறித்தெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றார். மேலும் விஜய்யால் அவரது நிம்மதி பறிபோனதாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், " வீட்டை விட்டு வெளிய வர முடியல... விஜய்யோட ஒவ்வொரு அரசியல் செயல்பாடு குறித்தும் என்ன நெனைக்கறீங்கன்னு கேட்டு உயிரை வாங்கறானுங்க. சினிமாவை விட்டு போறான்னு நிம்மதியா இருந்தா.. இப்ப அரசியலுக்கு வந்து நிம்மதியை கெடுக்கறான். எனக்கு அரசியலே தெரியாது. என்னை விட்ருங்கடா" என பதிவிட்டுள்ளார்.

blue sattai maran rajinikanth vijay tvk

அரசியல்வாதியா? மேலும், " இனிமே விஜய்யின் அரசியல் பத்தி கேள்வியே கேக்கப்படாது. மனசிலாயோ.‌. ரிப்போர்ட்டரே?" என்று ஒரு பதிவும், "தலைவரின் புதுப்பட டைட்டில் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்" என மற்றொரு பதிவிலும் பதிவிட்டுள்ளார். மேலும், " தலைவர் என்ன அரசியல்வாதியா? அவர்கிட்ட ஏன் அரசியல் கேள்வி கேக்கறாங்க- கோச்சடையான் கோவிந்த். கட்சி நிகழ்ச்சில கலந்துக்கிட்டு ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ் பத்தி பேசி கலகத்தை உண்டாக்குவாராம். ஆனா அரசியல் கேள்வி மட்டும் கேக்க கூடாதாம். எந்தா சாரே நியாயம் இது? - கில்லி கிச்சா" என காலாய்த்தும் பதிவிட்டுள்ளார்.

blue sattai maran rajinikanth vijay tvk

விஜய் அரசியல்: ஏற்கனவே விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் ரஜினிக்கு மகிழ்ச்சி எனவும், விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ரஜினிக்கு மகிழ்ச்சி இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியைதையும் வைத்து, ப்ளூ சட்டை மாறன் இந்தப் பதிவு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

blue sattai maran rajinikanth vijay tvk

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X