விஜய் கட்சியை வீழ்த்த சூப்பர் ஸ்டார் சதித்திட்டம்? இஷ்டத்துக்கு அடிச்சுவிடும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் கவனிக்கப்படும் சினிமா விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். சில நேரங்களில் சினிமாவுக்கு விமர்சனம் செய்வது மட்டும் இல்லாமல் சினிமா நட்சத்திரங்களில் தனிப்பட்ட வாழ்வில் மூக்கை நுழைத்து, சம்பந்தப்பட்டவர்களிடமோ அல்லது அவர்களது ரசிகர்களிடமோ வாங்கிக் கட்டிக் கொள்வார். அந்த வகையில் இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, பல்வேறு கருத்துக்களை தனது எக்ஸ் பக்கதில் மறைமுகமாக, பதிவிட்டு வருகின்றார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நேற்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு எழுதிய காவியத் தலைவன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல விஷயங்களைப் பேசினார். குறிப்பாக, " விமர்சனங்கள் என்பது தேவைதான். ஆனால் விமர்சனங்கள் மழை போல இருக்க வேண்டுமே தவிர புயல் போல இருக்கக் கூடாது. புயல் போல விமர்சனங்கள் இருந்தால் மரங்களே சாய்ந்துவிடும். எனவே விமர்சனம் செய்யுங்கள். விமர்சனம் என்ற பெயரில், யார் மனதையும் நோகடிக்காதீர்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

சூப்பர் ஸ்டாரின் இந்தப் பேச்சினை மைய்யமாக வைத்து, ப்ளூ சட்டை மாறன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றார். முன்னதாக, ”தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த அரசியலுக்கு வரப்போறதா சொன்னாரு. கடைசில...ஓய்வு தேவைப்படுது. டாக்டர்கள் சொன்னதை கேட்டாகனும். அதனால கட்சி கேன்சல்னு அறிவிச்சாரு. இப்ப என்னடான்னா.. ஓய்வே இல்லாம ஆக்சன் படங்களா நடிச்சி தள்ளிட்டு இருக்காரே...!!” என விமர்சனம் செய்திருந்தார்.

ரஜினிகாந்த்: இந்நிலையில், தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொற்களைப் பார்க்கும்போது, நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திட்டம் தீட்டி வருவதைப் போல் குறிப்பிட்டுள்ளதாக பலரும் கூறிவருகின்றனர். அதாவது, "அடுத்த ரெண்டு படத்திலேயும் அவன் எடுக்கப்போற வசூலை நான் தாண்டனும். அது கூட பரவால்ல..வர்ற தேர்தல்ல அவன் ஜெயிக்காம இருக்க ஏதாவது ராஜதந்திரம் செஞ்சே ஆகனும். என்ன செய்யறது..? எனவும், 'ஏன் தம்பி..தலைவர்தான் அரசியலுக்கு வரலையே. அவரைப்பத்தி பேசாம அமைதியா இருக்கலாம்ல. இருக்கலாம்தான். ஆனா அவரு அமைதியா இல்லையே..' என பதிவிட்டுள்ளார்.
விஜய் அரசியல்: அதேபோல் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் ரஜினிக்கு மகிழ்ச்சி எனவும், விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ரஜினிக்கு மகிழ்ச்சி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியைதையும் வைத்து, ப்ளூ சட்டை மாறன் இந்தப் பதிவையும் இதற்கு முந்தையப் பதிவையும் சேர்த்துப் பார்த்தால் ப்ளூ சட்டை மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைத்தான் குறிப்பிடுகின்றார் என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது


Click it and Unblock the Notifications











