Blue Sattai Maran Kanguva : கங்குவா ரசிகர்களை எச்சரிக்கும் ப்ளூ சட்டை.. என்னங்க இப்படி சொல்றாரு!

சென்னை: சூர்யா - திஷா பதானி நடிப்பில் இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி வெளியாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. மேலும் படம் வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை. மற்ற மாநிலங்களில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் கங்குவா படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

blue sattai maran suriya kanguva review

சூர்யாவின் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டது எனலாம். இப்படியான சூழலில் சூர்யாவின் ரசிகர்கள் கங்குவா படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தார்கள். தொடக்கத்தில் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14ஆம் தேதிக்கு படக்குழு ஒத்திவைத்தது. இப்படியான நிலையில் படம் 11 ஆயிரம் ஸ்கிரீன்களில் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் ஞானவேல் ராஜாவின் பேச்சுகள் ஓவர் பில்டப் என்றும் பேச்சுகள் எழுந்தது.

ஞானவேல் ராஜா: இப்படியான நிலையில் ஞானவேல் ராஜாவின் ஓவர் பில்டப்கள் குறித்தும் படக்குழுவினர் கொடுத்த ஓவர் பில்டப்கள் குறித்தும் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் கூறிய, "மொத்தம் 38 மொழிகளில் கங்குவா ரிலீஸ் ஆகிறது. ஆகவே இது தமிழ் சினிமாவின் முதல் Pan. World படமாக இருக்கும். இனி.. சூர்யா பான் இண்டியா ஸ்டார் மட்டுமல்ல. அதையும் தாண்டி பான் வேர்ல்ட் ஸ்டார் ஆவதை யாரும் தடுக்க இயலாது" என்பதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

blue sattai maran suriya kanguva review

பில்டப்: மேலும், "இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டைக்காட்சி இதில் உண்டு. கங்குவா ஒரு கட்டுப்படுத்த முடியாத காட்டாறு" என இயக்குநர் சிறுத்தை சிவா கூறியதையும் பகிர்ந்திருந்தார். வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆகின்றது என்றால், அந்தப் படத்தின் விமர்சிக்கும் விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்திற்கு எப்போதும் தனி கவனம் மக்கள் மத்தியில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என முடிவெடுக்க விமர்சனங்களைப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

blue sattai maran suriya kanguva review

ஆடியோ: இப்படியான நிலையில் இன்று வெளியாகியுள்ள கங்குவா படத்தின் ஆடியோ குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்வதாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், " படத்தில் கருணாஸ் முதல் கலைராணி வரை ஏன் கத்துகின்றார்கள் எனத் தெரியவில்லை. அதுவும் ஸ்லோமோஷனில் கத்துகின்றார்கள். சேதமடைந்த செவிப்பறைகளுடன் படம் பார்க்கச் சென்றதற்காக வருந்துகின்றேன். நிச்சயம் லோடு லோடாக பஞ்சு வேண்டும். படத்திற்கு கங்குவா என்பதற்கு பதிலாக கத்துவா என வைத்திருக்கலாம். கத்தாம படம் பாருங்கப்பா.. கத்தறதேபடத்துல இருக்கறவங்கதாப்பா, என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X