Kanguva:எல்லா விமர்சனமும் கழுவிஊத்துறது இவரைத்தான்.. ப்ளூ சட்டை மாறன் கையை நீட்டுவது யாரைத் தெரியுமா
சென்னை: சூர்யா - திஷா பதானி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கங்குவா படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைத்தான் பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் படத்தில் ரசிகர்களை மிகவும் எரிச்சல் அடையச் செய்தது என படத்தின் இசையை பலரும் கூறி வருகின்றனர். மேலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் எதற்காக கத்திக் கத்திப் பேசுகின்றார்கள் என ஆடியன்ஸ்க்கு புரியவில்லை என்றும் காது வலி ஏற்பட்டதுதான் மிச்சம் என்றும் இணையத்தில் கருத்துகள் பலரும் பதிவிட்டு வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறனின் எக்ஸ் பதிவு வேகமாக பரவி வருகின்றது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், திஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

படத்திற்கு தமிழ்நாடு தவிர கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 6 மணிக் காட்சிகளுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டினைப் பொறுத்தவையில் இன்றும் நாளையும் அதாவது, நவம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் படத்தினை வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலங்களில் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: குறிப்பாக படம் பார்த்த விமர்சகர்கள் பலரும் படத்தில் சில காட்சிகள் நன்றாக இருப்பதாகவும், ஆனால் படக்குழு கொடுத்த பில்டப் அளவுக்கு படம் இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் பெரிய மைனஸ் என்றால் அது, படத்தின் இசை தான் என்றும், அதேபோல் கதாபாத்திரங்கள் பேசும்போது மிகவும் கத்தி கத்திப் பேசுவதால் படம் பார்க்கவே எரிச்சலாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " எல்லா விமர்சனமும் கழுவிஊத்துறது இவரைத்தான். இருக்கற இசைக்கருவிகளை கத்த விட்டது போதாதுன்னு.. அண்டா, குண்டா, தோசை கரண்டில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சி இருக்காராம்ல" எனப் பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவிற்கு இணையவாசி ஒருவர், என்ன தலைவரே இந்தமுறை மியூசிக் டைரக்ட்டர் பக்கம் வந்து இருக்கீங்க? எனக் கேள்வி எழுப்ப, அதற்கு ப்ளூ சட்டை மாறனோ, ' நம்ம காதாச்சே' எனப் பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

கத்துவா: இவர் ஏற்கனவே தனது எக்ஸ் பக்கத்தில், " படத்தில் கருணாஸ் முதல் கலைராணி வரை ஏன் கத்துகின்றார்கள் எனத் தெரியவில்லை. அதுவும் ஸ்லோமோஷனில் கத்துகின்றார்கள். சேதமடைந்த செவிப்பறைகளுடன் படம் பார்க்கச் சென்றதற்காக வருந்துகின்றேன். நிச்சயம் லோடு லோடாக பஞ்சு வேண்டும்.

படத்திற்கு கங்குவா என்பதற்கு பதிலாக கத்துவா என வைத்திருக்கலாம். கத்தாம படம் பாருங்கப்பா.. கத்தறதேபடத்துல இருக்கறவங்கதாப்பா" என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவும் பலரது கவனத்தினை ஈர்த்தது. அதேநேரத்தில் இவரது இப்படியான பதிவுகளுக்கு சூர்யாவின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டியும் வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











